(1277)

தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வானவர் கோனைக் கண்டமை சொல்லும் மங்கையார் வாட்கலி கன்றி,

ஊனமில் பாட லொன்பதோ டொன்றும் ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,

மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே.

 

பதவுரை

தேன் அமர் சோலை

-

வண்டுகள் படிந்த சோலைகளையுடைய

நாங்கை

-

திருநாங்கூரில்

நல் நடுவுன்

-

நட்ட நடுவில்

செம்பொன்செய் கோயிலின் உள்ளே

-

செம்பொன்செய் கோயிலென்னுந் திருப்பதியிலே

வானவர் கோனை

-

தேவாதிதேவனை

கண்டமை

-

தாம் ஸேவித்தபடியை

சொல்லும்

-

அருளிச்செய்தவரும்

மங்கையார்

-

திருமங்கையில் உள்ளார்க்குத் தலைவரும்

வாள்

-

வாட்படையை யுடையவருமான

கலிகன்றி

-

திருமங்கையாழ்வாருடைய,

ஊனம் இல் பாடல்

-

குறையொன்றுமில்லாத பாசுரமான

ஓன்பதோடு ஒன்றும்

-

இப்பத்துப்பாட்டுகளையும்

ஒழிவு இன்றி

-

ஒன்றும் விடாமல்;

கற்று வல்லார்கள்

-

ஓதி யுணரவல்லவர்கள்

மானம்

-

பரப்பையுடைய

வெண் குடை கீழ்

-

வெண்கொற்றக் குடையின் கீழ் (இருந்துகொண்டு)

வையகம்

-

பூ மண்டலத்தை

ஆண்டு

-

அரசாண்டு

மகிழ்ந்து

-

உவந்து

வானவர் ஆகுவர்

-

(பிறகு) நித்யஸூரிகளுமாவர்

 

English Translation

Groves dripping nectar, Nangur-surrounding, -semponsei koyil in their midst; Lord of celestials, sung in the songs of king of Mangai Kalikanri. Those who tan master this prefect garland of beautiful Pann based Tamil songs; will get the rule of under-parasol, then become gods in the sky as well.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain