(1276)

களங்கனி வண்ணா. கண்ணணே என்றன் கார்முகி லேஎன நினைந்திட்டு,

உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள் உள்ளத்து ளூறிய தேனை,

தெளிந்தநான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.

 

பதவுரை

களங்கனி வண்ணா

-

களாப்பழம்போன்ற திருநிறமுடையவனே!

கண்ணனே

-

ஸ்ரீக்ருஷ்ணனே!

என்தன் கார்முகிலே

-

என்னுடைய காளமேகமே!

என நினைந்திட்டு

-

என்று தியானித்து

உளம் கனிந்திருக்கும்

-

நெஞ்சு பரிபக்குவமாயிருக்கிற

அடியவர்

-

தங்கள்  அடியார்களுடைய

உள்ளத்துள் ஊறிய தேனை

-

ஹ்ருதயத்திலே மாற்றுமாறாதே யிருக்கிற தேன் போன்றவனும்,

தெளிந்த நான் மறையோர் நாங்கை நன்னடுவுள்

செம்பொன்செய் கோயிலின் உள்ளே;

வளம் கொள்பேர் இன்பம் மன்னி நின்றானை

-

மிகுந்த பரமாநந்தம் பொருந்தி நிற்பவனுமான பெருமானை

நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தெளிந்த நான்மறையோர் – ஒருஸமயத்தில் ஸர்வேச்வரன் ரக்ஷகனென்றிருப்பது, மற்றொரு ஸமயத்திலே மற்றொன்று ரக்ஷகமென்றிருப்பது, ஆக விப்படி மாறிமாறிக் கலங்கு கையின்றியே, எக்காலத்திலும் எவிவிடத்திலும் எவ்வவஸ்தையிலும் எம்பெருமானே ரக்ஷகன் என்னும் தெளிவுடையார் வாழுந்திருநாங்கூர் என்க.  இப்படிப்பட்ட தெளிவுடையார்க்குக் காட்சி கொடுத்துக்கொண்டு நிற்கப்பெற்றோமே யென்னும் மகிழ்ச்சி வடிவிலே தோன்ற நின்றமயால் “வளங்கொள் போரின்பம் மன்னிநின்றானை” என்றார்.

 

English Translation

"O, Meion-coloured Lord, O, Precious Krishna, Dark as the cloud-hue!", calling thus, Devotees who offer worship and melt their hearts, find him in their heart as nectar sweet, Clear thinking Vedic seers residing in Nangur, -Semponsei Koyil in their midst, Praising my precious Lord, spring of eternal joy, I have found my spiritual elevation.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain