(1275)

அன்றிய வாண னாயிரம் தோளும் துணியவன் றாழிதொட் டானை,

மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல் மேவிய வேதநல் விளக்கை,

தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை வணங்கிநான் வாழ்ந்தொழிந்தேனே.

 

பதவுரை

அன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய

-

கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி

அன்று ஆழி தொட்டானை

-

அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும்

மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய

-

ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும்

வேதம் கல் விளக்கை

-

வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும்,

தென்திசை திலதம் அனையவர்

-

தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற

நாங்கை  செம்பொன்செய்

கோயிலின் உள்ளே;

மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானே

-

ஸ்ரீ வைஷ்ணவகோஷ்டி விளங்கத் திருவுள்ளமுவந்துநிற்பவனுமான பெருமானை

நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மன்றதுபொலிய – பலர்திரட்சியாகக் கூடுமிடத்திற்கு ‘மன்று’ என்று பெயர்; ‘நாங்கை நாலாயிரம்’ என்ற பழமொழியின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தவிடமாயிருந்தது பற்றி “மன்றதுபொலிய” என்கிறார் என்னலாம்: (அது-முதல்வேற்றுமைச்சொல்லுருபு.)

 

English Translation

Then in the yore to vanquish the thousand-armed Bana, he wielded his gold discus. He is the resident Venkatam Lord who shines like a beacon in Vedic chants, Stars-of-the-South' seers residing in Nangur, -Semponse! Koyil is in the midst.  Seeing my precious Lord, granting prosperity, I have found my spiritual elevation.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain