(1273)

மல்லைமா முந்நீ ரதர்பட மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,

கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை கலங்கவோர் வாளிதொட் டானை,

செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

அல்லிமா மலராள் தன்னொடு மடியேன் கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.

 

பதவுரை

மல்லை மாமுந்நீர் அதர்பட

-

செல்வம் மிக்க பெரிய கடலானது வழியாக அமையும்படி

மலையால் அணை செய்து மகிழ்ந்தவன் தன்னை

-

மலைகளைக்கொண்டு அணைகட்டி திருவுள்ள முகந்தவனும்,

கல்லின் மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க

-

(த்ரிகூடமென்னும்) மலையின் மேலே கட்டப்பட்ட அரணான மதிளை யுடைத்தான இலங்காபுரியானது சிதறிபொழியும்படி

ஓர் வாளி தொட்டனை

-

ஒரு அம்பை பிரயோகித்தவனுமான பெருமாணை

செல்வம் நால்மறையோர்

-

சதுர்வேதங்களைச் செல்வமாகவுடைய அந்தணர் வாழ்கிற

நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே;

அல்லி மாமலராள் தன்னொடும்

-

பிராட்டியோடு கூட

அடியேன் கண்டுகொண்டு

-

அடியேன் ஸேவித்து

அல்லல் தீர்ந்தேன்

-

துன்பங்கள் தொலையப் பெற்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கடல் ரத்னங்களுக்குப் பிறப்பிடமாதலால் ‘மல்லைமா முந்நீர்’ எனப்பட்டது.  த்ரி கூடமென்னும் மலையின் சிகரத்திலே இலங்கைமாநகர் இயற்றப்பட்டதாதலால்  ‘கல்லின் மீதியன்ற’ எனப்பட்டது.  கல் - மலைக்கு ஆகுபெயர்.  கடி – அரண்.

 

English Translation

Building a bridge of rocks over foaming sea in the yore, fifty Lord who found his joy shot heavy arrows over the mighty walled city of the island-king Lanka.  Learning-wealthy Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, seeing my precious Lord, with the lotus-Lakshmi, I have found my spiritual elevation.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain