(1271)

வசையறு குறளாய் மாவலி வேள்வி மண்ணள விட்டவன் றன்னை,

அசைவறு மமர ரடியிணை வணங்க அலைகடல் துயின்றவம் மானை,

திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

உயர்மணி மகுடம் சூடிநின் றானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

 

பதவுரை

வசை அறு குறள் ஆய்

-

குற்றமற்ற வாமநரூபியாய்க்கொண்டு

மாவலி வேள்வியில்

-

மஹாபலியினுடைய யாக பூமியில்

மண் அளவிட்டவன் தன்னை

-

உலகளந்தவனும்,

அசைவு அறும் அமரர்

-

சலிப்பில்லாத நித்யஸூரிகள்

அடி இணை

-

உபயபாதங்களை

வணங்க

-

ஆச்ரயிக்கும்படியாக

அலை கடல் துயின்ற அம்மானை

-

அலையெறிகின்ற திருப்பாற் கடலில் பள்ளிகொண்டிருப்பவனும்,

உயர் மணி மகுடம் சூடி நின்றானை

-

உயர்ந்த ரத்ன கிரீடத்தை அணிந்துகொண்டிருப்பவனுமான பெருமானை

திசைமுகன் அனையோர்

-

பிரமனைப்போன்ற அந்தணர்கள் வாழ்கிற

நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்

 

English Translation

Going as a manikin to the Bali-sacrifice he took the Earth in two big steps, Gods in the sky above offer him worship in his deep-ocean cool resort, Brahma-like Vedic seers residing in Nangur, -Semponsei koyil is in their midst, Seeing the good Lord, wearing a tall crown I have found my spiritual elevation.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain