(1268)

பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,

வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,

சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,

காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.

 

பதவுரை

உலகத்தவர் பேர் அணிந்து

-

இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு

தொழுது ஏத்தும் பேரருளாளன்

-

அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய்

எம்பிரானை

-

எமக்கு ஸ்வாமியாய்

கார் அணிமேகம் நின்றது ஒப்பானை

-

மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை

சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள்

-

அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே

செம்பொன் செய் கோயிலின் உள்ளே

-

செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே,

வார் அணி முலையாள்

-

கச்சணிந்த முலையையுடையளான

மலர் மகளோடு

-

பெரிய பிராட்டியும்

மண் மகளும்

-

பூமிப்பிராட்டியும்

உடன் நிற்ப

-

கூடியிருக்க

கண்டு கொண்டு ஸேவித்து

உய்ந்தொழிந்தேன்

-

உஜ்ஜீவித்துப்போனேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பிராட்டிக்கு ‘வாரணிமுலையாள்’ என்று இட்ட விசேஷணம் அவளுடைய நித்யயௌவனத்தைக் காட்டுதற்கென்க.

நாங்கைநன்னடுவுள் - ‘செம்பொன்செய்கோயில்’ என்னுந் திருப்பதி திருநாங்கூரில் நட்டநடுவில் உள்ளது; இவ்வாழ்வார்தாமும் இத்திருப்பதியின் மங்களாசரஸநபரமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது.  “நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன; அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன; மேலே ஐந்து திருமொழிகளுள்ளன; இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.

 

English Translation

The world comes, to worship in tumultuous multitudes, my benevolent Lord Per-Arulalan, with corsetted-breast dame, sitting on a lotus,  and Dame of-the-Earth by the side of him. Splendorous mansions all around Nangur, -Semponsel Koyil is amid them.  Dark as the rain cloud, seeing the good Lord, I have found my spiritual elevation.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain