(1257)

காரார்ந்த திருமேனிக் கண்ணனமர்ந் துறையுமிடம்,

சீரார்ந்த பொழில்நாங்கைத் திருத்தேவ னார்தொகைமேல்

கூரார்ந்த வேற்கலியன் கூறுதமிழ் பத்தும்வல்லார்

ஏரார்ந்த வைகுந்தத் திமையவரோ டிருப்பாரே.

 

பதவுரை

கார் ஆர்ந்த திருமேனி கண்ணன்

-

மேகத்தோடொத்த திருமேனியை யுடைய கண்ணபிரான்

அமர்ந்து உறையும்; இடம்

-

பொருந்தி வாழும் திருப்பதியாய்,

சீர் ஆர்ந்த பொழில் நாங்கை

-

அழகு பொருந்திய சோலைகளை யுடைய திருநாங்கூரிலுள்ளதான

திருத்தேவனார் தொகைமேல்

-

திருத்தேவனார் தொகை யென்னும் திவ்யதேசம் விஷயமாக

கூர் ஆர்ந்த வேல் கலியன்;

கூறு

-

அருளிச்செய்த

தமிழ் பத்தும்

-

இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்

வல்லார்

-

ஓதவல்லவர்கள்

ஏர் ஆர்ந்த வைகுந்தத்து

-

நன்மை மிக்க ஸ்ரீவைகுண்டத்தில்

இமையவரோடு இருப்பார்

-

நித்யஸூரிகளோடு கூடி யிருக்கப் பெறுவார்கள்

 

English Translation

This garland of sweet Tamil songs by sharp-speared Kaliyan speaks of the dark hued Lord Krishna who resides permanently in the excellent groves of Nangur’s Tiruttevanar Togai. Those who master it will enter the good Vaikunta and live in the company of the celestials.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain