(1256)

கும்பமிகு மதயானை பாகனொடும் குலைந்துவீழ

கொம்பதனைப் பறித்தெறிந்த கூத்தனமர்ந் துறையுமிடம்,

வம்பவிழும் செண்பகத்தின் மணங்கமழும் நாங்கைதன்னுள்,

செம்பொன்மதிள் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

மிக கும்பம் மதம் யானை

-

பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது

பாகனொடும் குலைந்து வீழ

-

தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக

அதன் கொம்பை

-

அவ்யானையின் தந்தத்தை

பறித்து எறிந்த

-

பிடுங்கிப் பொகட்ட

கூத்தன்

-

திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்

அமர்ந்து உறையும் இடம்;

வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும்

-

அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற

நாங்கை தன்னுள்;

செம்பொன் மதிள் பொழில் புடை சூழ்

-

செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற

திருத்தேவனார் தொகையே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வம்பு -புதுமை ; வம்பவிழும் – புதுமையாக மலர்ந்த; அப்போதலர்ந்த என்கை.

 

English Translation

The pot-dancer Lord who broke the tusk of the rutted elephant and killed the mahout together with it, resides permanently at Nangur amid groves I of freshly blossoming Senbakam, surrounded by golden walls and orchards in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain