(1254)

ஓடாத வாளரியி னுருவாகி யிரணியனை

வாடாத வள்ளுகிரால் பிளந்தளைந்த மாலதிடம்,

ஏடேறு பெருஞ்செல்வத் தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,

சேடேறு பொழில்தழுவு திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

ஓடாத ஆள் அரியின் உரு ஆகி

-

நாட்டில் நடமாடாமல் அபூர்வமான நரஸிம்ஹ மூர்த்தியாகி

வாடாத வள் உகிரால்

-

வளையாத கூர்மைமிக்க நகங்களினால்

இரணியனை பிளந்து அளைந்த மாலது

-

ஹிரண்யாஸுரனைக் கிழித்து (ரத்தப்பெருக்கிலே) அளைந்து கொண்டிருந்த எம்பெருமானுடைய

இடம்

-

திருப்பதி (எதுவென்றால்)

ஏடு ஏறு பெரு செல்வத்து

-

புத்தகங்களிலே எழுதி வைக்கத்தக்க மிகுந்த ஐச்வரியத்தை யுடையராய்

எழில் மறையோர்

-

அழகிய வைதிகர்களான அந்தணர் வாழ்கிற

நாங்கை தன்னுள்;

சேடு ஏறு பொழில் தழுவு

-

இளமை பொருந்தி சோலைகளோடு கூடிய

திருத்தேவனார் தொகையே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏடேறு பெருஞ்செல்வத்து – எம்பெருமானுடைய பெருமையளை ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ பாரதம் முதலிய இதிஹாஸங்களாக ஏடுபடுத்தி வைத்திருப்பது போலப் புத்தகங்களாக எழுதி வைக்கத்தகுந்த பெருஞ்செல்வமுடையார் திருநாங்கூர்வைதிகர்கள் என்கை.  ஏடு என்று குற்றத்திற்கும் வாசகமாகையாலே குற்றமற்ற பெருஞ்செல்வத்தினர் என்று முரைப்பர்.  ஏறுகை – மாண்டுபோகை.

 

English Translation

The Lord, who came as a wonder-man-lion and tore apart the Asura Hiranya’s chest with sharp claws, resides at Nangur among bright Vedic seers, --whose wealth of knowledge should go on record, --amid the fragrant groves in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain