(1253)

ஞாலமெல்லா மமுதுசெய்து நான்மறையும் தொடராத

பாலகனா யாலிலையில் பள்ளிகொள்ளும் பரமனிடம்,

சாலிவளம் பெருகிவரும் தடமண்ணித் தென்கரைமேல்

சேலுகளும் வயல்நாங்கைத் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

நால் மறையும் தொடராத

-

நான்கு வேதங்களாலும் எட்டிப்பிடிக்க முடியாத (பெருமைபொருந்திய)

பாலகன் ஆய

-

இளங்குழந்தையாய்க்கொண்டு

ஞாலம் எல்லாம்

-

பூமிமுழுவதையும்

அமுது செய்து

-

விழுங்கி

ஆல் இலையில்

-

ஆலந்தளிரில்

பள்ளி கொள்ளும்

-

திருக்கண்வளர்ந்தருளுகிற

பரமன்

-

எம்பெருமானுடைய

இடம்

-

திருப்பதி (எதுவென்றால்),

தடமண்ணித் தென்கரை மேல்;

சாலி

-

செந்நெற் பயிர்களினுடைய

வளம்

-

செழிப்பானது

பெருகிவரும்

-

அதிகப்பட்டு வராநிற்பதாய்

சேல் உகளும்

-

மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றதான

வயல்

-

கழனிகளையுடைய

நாங்கை

-

திருநாங்கூரில்

திருத்தேவனார் தொகையே

சாலி

 

தற்சமவடசொல்

 

English Translation

The Lord, whom even the Vedas fail to comprehend, swallowed the Universe and slept as a child on a fig leaf. He resides at Nangur on the Southern banks of the river Manni amid fertile fields where Sel-fish dance, in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain