(1251)

இந்திரனு மிமையவரும் முனிவர்களும் எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும்,

எந்தையெமக் கருள், எனநின் றருளுமிடம் எழில்நாங்கை

சுந்தரநல் பொழில்புடைசூழ் திருத்தேவ னார்தொகையே.

 

பதவுரை

இந்திரனும்

-

தேவேந்திரனும்

இமையவரும்

-

மற்றுமுள்ள தேவர்களும்

முனிவர்களும்

-

(ஸநகர் முதலிய) மஹர்ஷிகளும்

எழில் அமைந்த

-

ப்ராஹ்மண லக்ஷ்மி பொருந்தியவனாய்

சந்தம்

-

வேதங்களை நிரூபகமாகவுடையனாய்

மலர்

-

தாமரைப்பூவினின்று தோன்றினவனாய்

சதுமுகனும்

-

பிரமனும்

கதிரவனும்

-

ஸூரியனும்

சந்திரனும்

-

சந்திரனும்

எந்தை

-

‘எமக்குஸ்வாமியானவனே!

எமக்கு

-

எங்கள் விஷயத்திலே

அருள்

-

கிருபைபண்ணவேணும்’

என

-

என்று பிரார்த்திக்க

நின்று

-

அதற்கு இசைந்து நின்று

அருளும் இடம்

-

(அப்படியே) கிருபை பண்ணுமிடம் (எதுவென்றால்)

எழில் நாங்கை

-

திருநாங்கூரில்

சுந்தரம் நல்பொழில்

-

மிகவுமழகிய சோலைகளாலே

புடை சூழ்

-

நாற்புறமும் சூழப்பட்ட

திருத்தேவனார் தொகையே--.

 

English Translation

Indra and the horde of celestials. Brahma and the chanting bards, the Sun god and the Moon god, all stand and worship, chanting, “Grace us!”. The Lord resides permanently at Nangur amid beautiful groves in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain