(1250)

வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்

தானாய வெம்பெருமான் தலைவனமர்ந் துறையுமிடம்,

ஆனாத பெருஞ்செல்வத் தருமறையோர் நாங்கைதன்னுள்

தேனாரு மலர்பொழில்சூழ் திருத்தேவ னார்தொகையே.


பதவுரை

வான் நாடும் மண் நாடும் மற்று உள்ள பல் உயிரும்

-

நித்ய விபூதியும் லீலாவிபூதியும் அவ்வவ்விடங்களிலுள்ள பல வகைப்பட்ட ஜீவராசிகளும்

தான் ஆய

-

ஆகிய அவையெல்லாம் தானேயாயிருக்கப்பெற்ற

எம்பெருமான் தலைவன் அமர்ந்து உறையும் இடம் -;

ஆனத

-

அழிவில்லாத

பெரு செல்வத்து

-

மிக்க ஐச்வரியத்தையுடையராய்

அருமறையோர்

-

அருமையான வேதங்களை ஓதினவர்களுமான அந்தணர் வாழ்கிற

நாங்கை தன்னுள் - ;

தேன் ஆரும் மலர் பொழில் சூழ்

-

தேன் நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த

திருத்தேவனார் தொகையே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பல்லுயிருந்தானாய வெம்பெருமான்” என்றவிடத்துக்குப் பெரியவாச்சான்பிள்ளை எடுத்துக்காட்டுகிற விசேஷோக்தி வருமாறு :- “தானும் குடும்பமுமாய்க் கலநெல் ஜீவிப்பானொருவனை ‘உனக்கென்ன வேணும்?’ என்றால், ‘எனக்குக் கலநெல்வேணும்’ என்னுமிறே தன்னபிமானத்துக்குள்ளே யடங்குகையாலே.  அப்படியே, தானே இதுக்கெல்லாம் அபிமாநியாயிருக்கிற ஸர்வேச்வரன் - ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களும் தனக்கு ப்ரகாரமாய்ப் புறம்பு ஒருவரின்றிக்கே உபயவிபூதியும் தன்நிழலிலே யொதுங்கும்படியிருக்கையாலே தலைவனானவன் வந்து நித்யவாஸம் பண்ணுகிற தேசம்.” ஆனாத – ஆன்--பகுதி

 

English Translation

The celestial world, the Earth-world, the souls and all else, --our Lord and masters is all these. He resides at Nangur, with the Vedic seers, who command the abiding wealth of the Vedas, amid nectar-dripping fragrant groves in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain