(1248)

போதலர்ந்த பொழில்சோலைப் புறமெங்கும் பொருதிரைகள்

தாதுதிர வந்தலைக்கும் தடமண்ணித் தென்கரைமேல்

மாதவன்றா னுறையுமிடம் வயல்நாங்கை வரிவண்டு

தேதெனவென் றிசைபாடும் திருத்தேவ னார்தொகையே.


பதவுரை

போது அலர்ந்த பொழில் சோலை புறம் எங்கும்

-

புஷ்பங்கள் மலரப்பெற்ற பெரிய சோலைகளுள்ளவிடங்கள் முழுதும்.

தாது உதிர

-

பூக்களின் தாதுகள் உதிரும்படியாக

பொரு திரைகள் வந்து அலைக்கும்

-

செறிந்த அலைகள் வந்து வீசப்பெற்ற

தடம் மண்ணி

-

பெரியமண்ணியாற்றினுடைய

தென் கரைமேல்

-

தெற்குக் கரையின் மேலே,

மாதவன் தான் உறையும் இடம்

-

மாதவப்பெருமாள் நித்ய வாஸம் செய்தருளுமிடம் (எதுவென்றால்,)

வயல் நாங்கை

-

கழனிகள் சூழ்ந்த திருநாங்கூரில்

வரி வண்டு தேதென என்று இசைபாடும்

-

ரேகைகளையுடைய வண்டுகள் தென்ன தென்னவென்று இசைபாடப்பெற்ற.

திருத்தேவனார் தொகை

-

திருத்தேவனார் தொகையென்னுந் திருப்பதியாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருப்பதியின் திருநாமம் “மாதவப்பெருமாள் ஸந்நிதி” என்றும் ப்ரஸித்தமாக வழங்கிவருதலால் “மாதவன் தானுறையமிடம்” என்றார்.  தேதென - இசைக்குறிப்பு.

 

English Translation

In the fertile fields of Nangur, bees sing ‘Te-tena’, in sweet modes. The mighty river Manni flows by, lashing waves that spill the pollen from lotus thickets. On the Southern banks of the river, the Lord resides permanently in Tiruttevanar Togai.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain