nalaeram_logo.jpg
(1198)

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

பதவுரை

தூ விரிய மலர்உழக்கி துணையோடும் பிரியாதே

-

சிறகு விரியும்படி இருந்து புஷ்பங்களே மிதித்து தன் துணைவியைவிட்டுப் பிரியாமலிருந்து

பூ விரிய மது நுகரும்

-

பூக்கள் விகஸிக்க, அவற்றிலுள்ள தேனைப் பானம் பண்ணுகிற

பொறி வாயி சிறுவண்டே

-

புள்ளிகளையும் ரேகைகளை யுமுடைய சிறிய வண்டே அக்நி காரியங்கங்கள் விஸ்தாரமாகப் பரவும்படி வைதிக மரியாதைகளே

வளர்க்கும் புகழ் ஆளர் திரு ஆவி

-

குறைவின்றி நடத்துகையால் வந்து கீர்த்தியையுடைய வைதிகரிகள் வாழ்கின்ற திருவாலியிலே நித்யவாஸம் பண்ணுகிற

ஏ வரிவெம் சிலேயானுக்கு

-

அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆளவல்ல எம்பெருமானுக்கு

என் நிலைமை உரையாய்

-

என்னுடைய அவஸ்தையை சொல்லுவாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வயலாலி மணவாளன் பக்கலிலே சென்று தமது நிலைமையைச் சொல்லுமாறு ஒரு வண்டை நோக்கிக் கூறுகிறார். அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தனையால்,  ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக் கிடக்கும்போது நீ இப்படி உன் காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ?’ என்னுங் கருத்து முன்னிரண்ட்டிகளில் வெளிவரும். வண்டுகள் சிறகுகளே விரித்துக்கொண்டு மலரை மிதித்தேறி மதுவைப் பருகுதல் இயல்பாதலால் “தாவிரியமலருழக்கி” எனப்பட்டது. ‘தா’ என்றும் ‘தாவி’ என்றும் சிறகுக்குப் பெயர். உழக்கல் மிதித்தல், சிதிலமாக்குதல்.

முதலடியில் “தாவிரியும் மலருழக்கி” என்ற பாடமுண்டென்று பெரியவாச்சான்  பிள்ளை வியாக்கியானத்தினால் தெரிகின்றது; தூய்தாக விரியும் மலரை=நன்றாக அலர்ந்த மலரை என்றபடி. பொறிவாயி = புள்ளிகளும் ரேகைகளும் வண்டுக்கு இயல்பு.

முன்னடிகளால், வண்டை விளித்து, இனிப் பின்னடிகளால் தனக்காகச் செய்யவேண்டுங்காரியத்தை நியனிக்கிறாள் பரகாலநாயகி. வயலாலி மணவாளனை நீ இங்கே அழைத்துக்கொண்டு வர வேண்டா; ‘இன்னாள்’ இன்னபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்’ என்று ஒரு சொல் அவன் செவியிலே விழவிட்டால் போதுமென்கிறாள்.

என்னிஹமையுரையாயே என்ற விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தின் அழகு காண்மின்;-“(உரையாயே.) கொடுவரவேண்டா; அறிவிக்குமித்தனையிறே இத்தலைக்கு வேண்டுவது; வருகை அவன் பணியே; வாராதொழியுமன்று ரக்ஷகனுக்குக் குறையாமே: நீங்களறி வித்தவநந்தரம் உங்கள் பேச்சுக் கேட்டுத் தானே வாராநிற்கும்” என்று.

English Translation

Hovering on the lotus blooms, --never leaving your beloved spouse, Drinking from the nectar filled buds, O, My freckled bumble-bees! Go to my bow-wielding Lord, tell him of my condition. He resides in Tiruvali guarding the Vedic fire.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain