nalaeram_logo.jpg
(1166)

செருநீல வேற்கண் மடவார் திறத்துச் சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,

அருநீல பாவ மகலப் புகழ்சேர் அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,

பெருநீர் நிவாவுந்தி முத்தங் கொணர்ந்து எங்கும் வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,

திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.

பதவுரை

செரு நீலம் வேல் கண் மடவார்திறத்து சினத்தோடு நின்று

-

யுத்தத்திற்குக் கருவியாய் நீல நிறத்தான வேல் போன்ற கண்களையுடைய ஸ்த்ரிகள் விஷயமாக வுண்டான கோபத்தோடு கூடியிருந்து

மனத்தால் வளர்க்கும் அரு நீலம் பாவம் அகல

-

நெஞ்சினாலே மேன்மேலும் வருத்தி செய்விக்கப்படுகிற போக்கமுடியாத நெஞ்சையிருள்மூடப் பண்ணுகிற பாவங்கள் நீங்கப்பெற்று

புகழ்சேர் அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்

-

புகழையுடைய பிரமன் முதலிய தேவர்கட்கும் துர்லபமான பரமபதத்திலே இருக்க வேண்டியிருக்கு மன்பர்களே?,

பெரு நீர்நிவா முத்தம் கொணர்ந்து உந்தி வித்தும் வயலுள் எங்கும்

-

மிக்க நீரையுடைய ‘நிவா’ என்னும் ஆறானது முத்துக்களைக் கொண்டுவந்து தள்ளி விதைவிதைத்தாற்போலே சொருகப்பெற்ற வயல்களிலெல்லாம்

கயல் பாய்ந்து உகள

-

மீன்கள் குதித்துத் துள்ளவும்

திரு நீலம் நின்று திகழ்கின்ற

-

அழகிய நெய்தல்மலர்கள் எப்போதும் விளங்கவும் பெற்ற

தில்லை சேர்மின்கள்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மடவார் திறத்துச் சினமாவது - மடவார்நிமித்தமாக வுண்டாகிற பகை;. அதாவது என்னென்னில்; தான் ஒரு மாதரை ஆசைப்பட்டிருக்க மற்றொருவனும் அவளிடத்தே ஆசைவைத்து இவனை அருகு நாடவொட்டாமல் அடித்துத்தள்ள, எப்பாடுபட்டாவது அந்தமாதரைத் தான் பரிக்ரஹித்தே தீருவதென்கிற் தீவ்ரமான நோக்கத்தினால் மற்றவனைக் கொலைசெய்துவிடு மளவுந் துணிந்து நிற்கை. இப்படிப்பட்ட துணிவினால் செய்யப்படும் பாவங்கள் பகவத் ப்ராப்திக்கு இடையூறாதலால் அவற்றையகற்றி, தேவதைகட்கும் எட்டா நிலமாகிய பரமபதத்திற் சென்று சேர்ந்து நித்ய கைங்கரியம் பண்ண வேணுமென்று விருப்புற்றிருக் குமவர்களே! என்று அன்பர்களை விளிக்கிறார் முன்னடிகளில்.  ஆன்னவர்களை விளித்து, ‘நீங்கள் தில்லைத் திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்கள்’ என்று சொல்லுவதன் கருத்து இருவகையதாம். சித்திரகூடத்திலே நீங்கள் சிலகாலமாவது வாழ்ந்தால்தான் உங்கட்குப் பரமபதப்ராப்தி உண்டாகும் என்பதாக ஒருகருத்து; பரமபதத்துக்குப் போகவேணு மென்கிற விருப்பம் உங்கட்கு ஏதுக்காக?; வீணான அந்த விருப்பத்தை விட்டிட்டுத் சித்திரகூடம் சென்று சேர்ந்தீர்ளாகில் அவ்விடத்திருப்பே உங்கட்குப் பரமபத வாழ்ச்சியாங்கிடீர் என்பதாக மற்றொரு கருத்து.

செருநீலவேற்கண்=செருச்செய்யும் வேலையும் நீலமலரையும் போன்ற கண்களையுடைய மடவார்என்றுரைத்தலுமாம். மடவாருடைய கலவிக்குப் பிரதிபந்தர்களாமவர் விஷயத்திருணடாகுஞ் சினத்தை மடவார் திறத்துச்சின மென்றது-அதற்கு மடவார்களே மூலகாரணமாதல் பற்றியென்க. “கூனியன் சொல்லால் இராமன் வநவாசஞ்சென்றான்” என்பதை இதற்கு ஒருபுடை ஒப்பாகக் கொள்க.

அருநீலபாவமகல= அருமையாயும் நீலமாயுமிருக்கிற பாவம் நீங்க; எப்படிப்பட்ட ப்ராயச்சித்தங்களாலும் போக்கமுடியாதனவதலால் ‘அரு’ என்றது; நெஞ்சை இருளப்பண்ணுதலால் நீலமென்றது.  மூன்றாமடியில் “வித்தும் வயலுள்” என்றது வினைத்தொகை. வித்து-வினைப்பகுதி வித்துதல்-விதைத்தல் இங்கு “வித்தும்வயலென்றது-விதைக்கப்பெற்ற வயலென்றபடி. வெள்ளாறு பெரு வெள்ளமாய்ப் பெருகி வரும்போது முத்துக்களைக் கொழித்துக் கொண்டுவந்து கழனிகளில் தள்ள அந்த முத்துக்கள் விதை விதைத்ததுபோல் விளங்க, அவற்றை மீன்கள்கண்டு ‘இவை என்னவோ!’ என்று வெருவித் தாவித் திரிகின்றன வென்று ஸ்வபாவோக்தியாகக் கூறினவாறு.

English Translation

Looking at dark Vel-eyed dames with anger and intent on enjoying them, only increase their store of misdeeds every day. Those who wish to cut at the root of this misery and turn to the Lord in his abode worshipped by the gods, -go now to Tillai Tiruchitrakudam where the big Niva Vellaru river flows through endless fields throwing pearls, where thickets of blue water-lily raise their heads and smile, while Kayla-fish dance inebriated.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain