nalaeram_logo.jpg
(1118)

திரிபுர மூன்றெரித் தானும்மற்றை மலர்மிசை மேலய னும்வியப்ப,

முரிதிரை மாகடல் போல்முழங்கி மூவுல கும்முறை யால்வணங்க,

எரியன கேசர வாளெயிற்றோ டிரணிய னாக மிரண்டுகூறா,

அரியுரு வாமிவ ரார்க்கொலென்ன அட்ட புயகரத் தேனென்றாரே.

பதவுரை

திரிபுரம் மூன்று எரித்தானும்

-

எங்குந் திரிந்துகொண்டு உலகங்கட்குத் துன்பம் விளைத்துக் கொண்டிருந்த மூன்று பட்டணங்களைக் கொளுத்தியொழித் தவனான சிவபிரானும்

மலர் மிசை மேல் அயனும்

-

தாமரை மலரிற் பிறந்து மேன்மை பொருந்திய பிரமனும்

வியப்ப

-

ஆச்சரியப்படவும்,

மூ உலகும்

-

மூன்று லோகங்களிலுமுள்ளவர்கள்

முரி திரைமா கடல் போல் முழங்கி

-

அலையெறிகின்ற பெரிய கடல் போலே (ஸ்தோத்ர) கோஷங்களைச் செய்து கொண்டு

முறையால்

-

முறைதவறாது

வணங்க

-

வணங்கவும்,

இரணியன் ஆகம் இரண்டு கூறு ஆ

-

இரணியாசுரனுடைய உடல் இரண்டு பிளவாம்படியாக

எரி அன கேசரம்

-

நெருப்புப்போன்ற உளைமயிர்களோடும்

வாள் எயிற்றோடு

-

வாள்போன்ற கோரப்பற்களோடும் கூடி

அரி உரு ஆம் இவர்

-

நரசிங்கவுருக்கொண்ட பெருமானைப் போன்றுள்ள இப்பெரியவர்

ஆர் கொல் என்ன

-

யார்? என்று நான் சொல்ல,

(அதற்கு அவர்)

அட்டபுய கரத்தேன் என்றார்

-

‘அட்டபுயகரக்ஷேத்ரத்திலுள்ளவன்; நான்’  என்று மறுமொழி கூறினார்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒரு பெரியவர் வந்து ஸேவைஸாதித்தார்,  அப்போதைய நிலைமை இப்படிப்பட்டிருந்ததென்கிறாள் பரகாலநாயகி;  சிவனும் பிரமனும் கண்டு ஆச்சரியப்படும்படியாகவும், மூவுலகத்திலுள்ளவர்களும் அலையெறிகின்ற கடல்போல் ஸ்தோத்ர கோஷங்களைச் செய்துகொண்டு வணங்கவும், நெருப்புப் போன்ற உளைமயிர்களோடும் வாள்போன்ற கோரப்பற்களோடுங்கூடி, இரணியன்  இருபிளவாம்படியாக நரசிங்கவுருக்கொண்டு தோற்றின இம்மஹாநுபாவர் ஆர்? என்று நான் கேட்டேன்;  அதற்கு அவர் “நான் அட்ட புயகரத்தேன்-அட்டபுயகரத்தில் வஸிப்பவன் காண்; ‘ அன்றொருகால் ப்ரஹ்லாதனுக்காக வந்து உதவினமாத்திரமன்று; உனக்கு உதவுகைக்காக இங்கே வந்து ஸமயம் பார்த்து நிற்கிறவனன்றோ நான்’ - என்றார் -என்கிறாள்.

எதிரேவந்து தோற்றினவருடைய ஸ்வரூப ஸ்வபாவங்கள் ஆழ்வார்க்குத் தெரியாதிருந்தால்  ‘இவரார்கொல்?’ என்று கேட்கலாம்;“திரிபுர”மென்று தொடங்கி “அரியுருவாமிவர்”என்னுமளவும் மூன்றரையடிகளால் அவனுடைய ஸ்வரூபஸ்வபாவங்களைத் தாம் நன்கறிந்தமையைச் சொல்லிவைத்து “ இவரார்கொல்?” என்று கேட்பது பொருந்துமோ? எனின்;   இதற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்கிறார்-- “ அடையாளம் சொல்லா நிற்கச்செய்தே நிச்சயிக்க வொண்ணாதபடியிறே விஷயஸ் பாவம்!”  என்று .  “இன்னாரென்றறியேன் அன்னேயாழியொடும் பொன்னார் சார்ங்கமுடைய வடிகளை இன்னாரென்றறியேன்”  என்னுமாபோலேயாம்.  “ அடையாளம் சொல்லாநிற்கச் செய்தே அறியேனென்னப் பண்ணுகிறது அவன்வைலக்ஷண்யம்” என்று அவ்விடத்திலும் வியாக்கியான ஸ்ரீஸூக்தியுள்ளது.  அஸாதாரண லக்ஷணங்களைத் தெரிந்துகொண்டபின் இன்னாரென்றறியாமை யென்பதொன்றுண்டோ வென்று பலர்க்கும் நெஞ்சில் கலக்கமாகவே யிருக்கும்;  ஆழ்வாருடைய நிலைமை வாய்த்தான்லன்றித் தெளிவு பிறவாது; என்செய்வோம்?.     ‘எதிரே வந்து தோன்றுகின்ற இவருடைய லக்ஷணங்களைப் பார்த்தால் இவர்  எம்பெருமானாயிருக்கக் கூடும்’  என்று நினைக்கலாகிறது;  ஆனால், ‘தெளர்ப்பாக்யசாலிகளான நமக்கு அவர் இவ்வளவு ஸுலபமாக ஸேவைஸாதிக்க ப்ராப்தி இருக்கமாட்டாதே’ என்று நம்முடைய தண்மையைக்கூடவே நினைத்துக்கொண்டால் ‘ வேறு யாரேனு மொருவரோ இவர்’ என்று ஸந்தேஹிக்க இடமுண்டாகிறது—என்பதாகக் கொள்க. பிராட்டி அசோகவநிகையில் வருந்திக்கிடந்தபோது சிறிய திருவடி வந்து எதிரே கைகூப்பி நின்று மெய்யே வார்த்தை சொல்லச் செய்தேயும் ‘ இஃ;து இந்நிலத்தில் ஸம்பாவிதமாகக் கூடியதன்றே’ என்று சிந்தித்த பிராட்டி “கிம் நு ஸ்யாத் சித்த மோஹோயம் பவேத் வாதகதிஸ்த்வியம், உந்மாதஜோ விகாரோவா ஸ்யாதியம் ம்ருகத்ருஷ்ணிகா.”  என்று ‘இது மதிமயக்கத்தால் வந்ததோ? காற்றுப்போக்கின் தோற்றரவோ? பித்தவிகாரத் தோற்றமோ? கானல் காட்சியோ?’ என்று பலவகையாகச் சங்கிக்கவில்லையா? நிற்க.

“அரியுருவாகிய நீர் ஆர்?” என்று அப்பெரியவரையே முகம்நோக்கிக் கேட்கமுடியாமல் தலைகுனிந்து வேறொருவரை நோக்கிக் கேட்பதுபோல் இவரார்கொல்? என்று நான் கேட்டேன், அதற்கு அவர்தாமே ‘நான் அட்டபுயகரத்தேன்’ என்று மறுமொழி கூறினார் என்கிறாள் பரகாலநாயகி.

அட்டபுயகரத்தேன் = அட்டபுயகரத்திலுள்ளவன் நான் என்று பொருள்.  ‘;அஷ்டபுஜன்’ என்பது எம்பெருமானுடைய திருநாமம்;  எட்டுத்திருக்கைகளை யுடையவன் என்று பொருள். க்ருஹம் என்ற வடசொல் கரமெனத்திரியும்; ஆகவே, அஷடபுஜனுடைய க்ருஹம்-அட்டபுயசரம்  (திவ்யதேசத்தைச்; சொன்னபடி.) அவ்விடத்திலுள்ளவன் நான் என்றதாயிற்று. ‘நான் அட்டபுயன்’ என்றே எம்பெருமான் மறுமொழி கூறியிருக்கலாமே; தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பதுபோல இங்ஙனே ஏதுக்குச் சொன்னான்? என்று கேள்விபிறக்கும்;  கேண்மின்;  நான் அட்டபுயன்’ என்று சொல்லிக் கொண்டால் தன்னை எம்பெருமானுக்குத்தானே வெளியிட்டதாக விளங்கிவிடும் திருவுள்ளமில்லை; வேற்றுமனிதனாகப் பொய்சொல்லிக்கொள்ளவும் விருப்பமி;ல்லை: ஆகவே, வெகு சாதுர்யமாகச்சொல்லிக்கொள்ளுகிறான் அட்டபுயகரத்தேன் என்று. ‘அஷ்டபுஜ க்ஷேத்திரத்திற்கு நான் அதிபதி’ என்றதாகவுமாம்.  ‘அஷ்டபுஜ க்ஷேத்திரத்திலே கிடப்பானொருவன் நான்’ என்று ஸாமாந்யமாகச் சொல்லிக்கொண்ட தாகவுமாம்.

துஷ்யந்தமஹாராஜன் வேட்டையாடிக்கொண்டே சகுந்தலையின் இருப்பிடத்தை அடைந்த போது இவனின்னானென்று தெரிந்துகொள்ள விரும்பி ‘நீயார்?’ என்று கேட்டார்க்கு அரசன் விடை கூறும்போது, '**************************************************…..”  புரு வம்சத்து அரசனாலே தரும காரியங்களைச் செய்யுமாறு நியமிக்கப்பட்டவன் நான் என்று சாதுரியமாக விடைகூறினது இங்கு நினைக்கத்தக்கது.  புரு வம்சத்து அரசனாகிய தன் தந்தையினால் நியமிக்கப்பட்ட அரசன் தான் என்றும், புருவம்சத்து ராஜாவுக்கு வேலைக்காரன் தான் என்றும்; இருவகையாகப் பொருள்படுமாறு உரைத்து காண்க.

“அட்டபுயவகரம்” என்பது அட்டபுயகரம்; என மருவிற்றென்றலும் பொருந்தும்; அகரமாவது அக்ரஹாரம்.

English Translation

Siva who burnt the three cities and Brahma seated on the lotus were baffled; roaring like the waves of the ocean, -the three worlds offering worship with method, - his manes rising like flames and his feline-teeth shining brightly, a lion-like form spread himself before me. Who this could be, I wondered. “I am the Lord of Attabuyakaram!” he said.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain