(1104)

பஞ்சிச் சிறுகூழை யுருவாகி, மருவாத

வஞ்சப்பெண் நஞ்சுண்ட அண்ணல்முன் நண்ணாத,

கஞ்சைக் கடந்தவனூர் கடன்மல்லைத் தலசயனம்,

நெஞ்சில் தொழுவாரைத் தொழுவாயென் தூய்நெஞ்சே.

 

பதவுரை

பஞ்சி சிறு கூழை உரு ஆகி

-

பஞ்சுபோலே மிருதுவாய் சிறிதான மயிர்முடியையுடையளான யசோதைப் பிராட்டியின் உருவெடுத்துக் கொண்டு (வந்தவளும்)

மருவாத வஞ்சம் பெண் நஞ்சு

-

நெஞ்சில் இரக்கமற்றவளும் வஞ்சகமுடையவளுமான  பூதனையென்னும் பேய்மகளினுடைய (முலையில் தடவியிருந்த) விஷத்தை

உண்ட அண்ணல்

-

அமுது செய்த ஸ்வாமியும்,

முன்

-

முன்னொருகால்

நண்ணாத நஞ்சை கடந்தவன்

-

தன்னிடத்து அன்பு கொள்ளாமலிருந்த கம்ஸனை வென்று முடித்தவனுமான பெருமானுடைய

ஊர்

-

திவ்ய தேசமாகிய

கடல்மல்லை தலசயனம்

-

திருக்கடன்மல்லையை

நெஞ்சில் தொழுவாரை

-

நெஞ்சாரத் தொழுகின்ற பாகவதர்களை

என் தூய் நெஞ்சே

-

எனது பரிசுத்தமான மனமே!

தொழுவாய்

-

நீ தொழக்கடவை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பஞ்சிச்சிறு கூழையுருவாகி” என்றது பூனையிடத்து அந்வயிக்கவுமாம், கண்ணபிரானிடத்தில் அந்வயிக்கவுமாம்.  பூதனையிடத்து அந்வயிக்கும்போது “பஞ்சச்சிறுகூழை” என்னுமளவும் அன்மொழித் தொகையாய், பஞ்சுபொல் மெல்லிய சிறிய கடலையுடையவள் என்று பொருள்பட்டு யசோதைப்பிராட்டிக்கு வாசகமாகி, அவளுடைய வேஷத்தை ஏறிட்டுக்கொண்டு வந்தாளென்றதாகிறது. ‘நம்முடைய தாயான யசோதைகள் நமக்கு முலைகொடுக்க வருகிறாள்’ என்று கண்ணபிரான் கருதவேணுமென்று தாய்வேடம் பூண்டு வந்தாளிறே பூதனை.

இனி, “பஞ்சிச் சிறுகூழை யுரவாகி” என்றதைக் கண்ணபிரானிடத்து அந்வயிக்கில், பிடித்துக் கட்ட வொண்ணாதபடியான மயிர்முடியையுடைய இளம்பிள்ளையான பருவத்திலேயே வஞ்சப் பெண்ணின் விஷத்தையுண்டவன் என்பதாம்.

‘கம்ஸ’ என்ற வடசொல் ‘கஞ்சு’ எனச் சிதைந்தது.  “கஞ்சைக் காய்ந்த கருவில்லி” என்றாள் சூடிக்கொடுத்த நாச்சியாகும்.

 

English Translation

The Lord came as a wee little infant and relished the poison on the breast of the ogress Putana. He killed Kamsa too. He resides in Kadal Mallai Talasayanam. Those who contemplate him in their hearts are our masters, O Heart!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain