(1098)

நண்ணாத வாளவுண ரிடைப்புக்கு, வானவரைப்

பெண்ணாகி யமுதூட்டும் பெருமானார், மருவினிய

தண்ணார்ந்த கடன்மல்லைத் தலசயனத் துறைவாரை,

எண்ணாதே யிருப்பாரை யிறைப்பொழுது மெண்ணோமே.

 

பதவுரை

பெண் ஆகி

-

மோஹிநிபவதாரமெடுத்து,

நண்ணாத வாள் அவுணரிடைபுக்கு

-

பிரதிகூலர்களான அசுரர்களின் நடுவே புகுந்து

(அவர்களை வஞ்சித்துவிட்டு)

வானவரை அமுது ஊட்டும் பெருமானார்

-

தேவர்களுக்குமாத்திரம் அமுதமனித்த ஸ்வாமியாயும்,

மருவ இனிய

-

பொருந்தி வாழ்வதற்குப் பாங்கான

தண் ஆர்ந்த

-

குளிர்ந்திநிரம்பிய

கடல்மல்லை தலசயனத்து

-

திருக்கடல்மல்லை யென்னும் திருப்பதியில்

உறைவாரை

-

நித்யவானம் செய்பவராயுமிருக்கிற ஸ்தலசாயிப்பெருமாளை

எண்ணாதே இருப்பாரை

-

சிந்தியாமலிருப்பவர்களை

இறைபொழுதும்

-

அற்பகாலமும்

எண்ணோம்

-

ஒரு பொருளாக நினைக்கமாட்டோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

திருக்கடல்மல்லைத் தலசயனத்துறைவாரைச் சிந்தை செய்யாதவர்கள் பதார்த்தகோடியிலேயே சேராதவாகளாகையால் அபதார்த்தங்களான அவர்களை நான் ஒரு பொருளாகவே மதிக்கமாட்டேனென்கிறார்.  தலசயனத்துறைவாரைச் சிந்திக்கும் மஹான்களையே நான் அநவரதம் சிந்திப்பேன் என்பது தேறும்.

நண்ணாத = பகவத்விஷயத்தில் பகையை இயற்கையாகவுடைய என்றபடி. ஸாதுக்களைக் கண்டவுடனே கொல்வற்காக வாட்படையைக் கையோடே வைத்துக்கொண்டிருப்பவர்களாதலால் “வாளவுணர்” என்றார்;.

 

English Translation

Going between the unrelenting Asuras dressed as a female, the lord gave ambrosia to the gods. He resides in cool, fragrant kadal Mallai as Talasayanam, a form reclining on the ground. We shall not regard those who do not even for a moment think of him.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain