nalaeram_logo.jpg
(1088)

பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப் பாடுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட

சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள் சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,

போரானைக் கொம்பொசித்த போரேற்றினைப் புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,

காரானை யிடர்க்கடிந்த கற்பகத்தைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

பதவுரை

பார் ஆயது

-

உலகமாக வுள்ளவற்றை யெல்லாம்

உண்டு

-

(பிரளயம் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்து

உமிழ்ந்த

-

(பிரளயம் கழிந்தபிறகு) வெளிப்படுத்தினவனும்

பவளம் துணை

-

பவழத்தூண் போலே விரும்பத்தக்கவனும்

படு கடலில் அமுதத்தை

-

ஆழ்ந்த கடலிலுண்டான அமுதம்போலே போக்யனானவனும்

பரி வாய் கீண்ட சீரானை

-

குதிரை வடிவுடன் வந்த கேசியென்னுமஸூரனுடைய வாயைக் கிழித்தெறிந்த வீரலக்ஷ்மியையுடையவனும்

எம்மானை

-

எனக்கு ஸ்வாமியானவனும்

தொண்டர் தங்கள் சிந்தை உள்ளே

-

அடியவர்களுடைய நெஞ்சினுள்ளே

முளைத்து

-

தோன்றி

எழுந்த

-

அபிவிருத்தியடைகின்ற

தீம் கரும்பினை

-

இனிய கரும்பு போன்றவனும்

போர் ஆனை

-

போர் செய்யவந்த குவலயாபீடமென்னும் யானையினுடைய

கொம்பு

-

தந்தங்களை

ஒசித்த

-

முறித்தெறித்த

போர் ஏற்றினை

-

யுத்தஸாமர்த்திய முள்ளவனும்

புணர் மருதம் இற நடந்த

-

இரட்டை மருதமரங்கள் முறியும்படி தவழ்ந்தவனும்

பொன் குன்றினை

-

பொன்மலை போல் அழகியவனும்

கார் ஆனை இடர் கடிந்த

-

பெரிய கஜேந்தராழவானுடைய துன்பத்தைத் தொலைத்தவனும்

கற்பகத்தை

-

கல்பவருக்ஷம்; போல ஸர்வ ஸ்வதானம் செய்பவனுமான எம்பெருமானை

நான் கண்டது

-

அடியேன் ஸேவிக்கப்பெற்றது (எவ்விடத்திலென்றால்)

கடல்மல்லை தலசயனத்து

-

ஸ்தலசாயிப் பெருமாளுடையதான திருக்கடல் மல்லையிலே

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியாலும் மேல்திருமொழியாலும் திருக்கடல்மல்லைத் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தருளுகிறார்.  அத்திருப்பதியி லெழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு ‘ஸ்தலசாயீ’ என்று வடமொழித் திருநாமம்.  ஸ்ரீ புண்டரீக மஹர்ஷியின் கைகபினால் பூ விடுவித்துக் கொண்டு இன்னும் இப்படிப்பட்ட பக்தர்கள் கிடைக்கக்கூடுமோ வென்றெதிர்  பார்த்துக்கொண்டு தரைக்கிடை கிடக்கிறபடி.  அது தோன்ற இத்திருப்பதியின் திருநாமத்தைக் கடன்; மலலைத்; தலசயனம் என்று ஆழ்வார் அநுஸந்திக்கிறார்.

“பாரையுண்டு” என்னாது “பாராணதுண்டு” என்றது-அமுது செய்யாமல் மிச்சப்பட்ட வுலகம் எதுவுமில்லை என்றதைக் காட்டும்.  பாரென்று பேர் பெற்றவை எல்லாவற்றையும் உண்டு என்கை. பார் என்னுஞ் சொல் பூமிக்கு மாத்திரம்; வாசகமாயினும் இங்கு இலக்கணையால் உலகமென்று ஸாமாந்யப் பொருள் பெற்றிருக்கும்.

படுகடல் ஸ்ரீ ரத்னங்கள் படுகிற (உண்டாகிற) கடல் என்றும், ஆழ்ந்த கடல் என்றும் பொருள்.

கடன்மல்லைத்தலசயனத்து  ஸ்ரீ  தலசாயிப்பெருமா ளெழுந்தருளி யிருப்பதனால் தலசயனமென்று பேர் பெற்றதும் கடற்கரையிலே யுள்ளதுமான மல்லாபுரியிலே - என்று பொருள் விரித்துக்கொள்க. புண்டரீகர் என்கிற ஒரு பரமபக்தர், கடலின் இக்கரையிலே ஒரு பெரிய தோட்டம் ஏற்படுத்தி அதில் சிறந்த புஷ்பங்களை யுண்டாக்கி அவற்றைத் தொடுத்தெடுத்துக் கொண்டுபோய் எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேணுமென்று பாரித்தார்;  கடலைக் கடந்து செல்லவேண்டி யிருந்தமையால் இக்கடலைக் கையால் இறைத்துவிட்டு வெறுந்தரையாக்கி நடந்தே செல்லுவொமென்று துணிந்து கடலை இறைக்கத் தொடங்கவே, எம்பெருமான் அவருடைய ஆதராதிசயத்தைக்கண்டு வியந்து உவந்து, தானே கடற்கரையிலே ஓடிவந்து அவரது தோப்பிலே தரைக்கிடை கிடந்து அவருடைய வழிபாடுகளை ஸ்வீகரித்தருளினன் என்பது புராணவரலாறு.

English Translation

The Lord swallowed the Earth and remade it. He is a coral sprig, and ambrosia of the ocean, the auspicious one who ripped the horse’s jaws. He is our lord, sprouting like sugarcane in the hearts of devotees. He is the battle-lion who plucked the battle-elephant’s tusk. He is a mountain of gold that Walked between the two Marudu trees, he is the Kalpaka Lord who saved the dark elephant in distress. I have seen him Talasayanam at kadal Mallai.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain