முதல் திருமொழி

(3891)

தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்

நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்

காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே.

விளக்க உரை

(3892)

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்

அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்

நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்

நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே.

விளக்க உரை

(3893)

அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே.

விளக்க உரை

(3894)

இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர

படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்

இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர்! வம்மினே.

விளக்க உரை

(3895)

தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி யொருதனி முதல்வன்

அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்

எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய

கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே.

விளக்க உரை

(3896)

கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்

ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்

வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்

ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே.

விளக்க உரை

(3897)

மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா

சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா

முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்

சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ.

விளக்க உரை

(3898)

துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்

உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்

பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த

தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே.

விளக்க உரை

(3899)

மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்

அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்

துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்

நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே.

விளக்க உரை

(3900)

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்

தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்

காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்

நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள்.

விளக்க உரை

(3901)

ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு

கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்

வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு

ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain