மூன்றாந் திருமொழி

(3913)

வேய்மரு தோளிணை மெலியு மாலோ! மெலிவுமென் தனிமையும் யாதும் நோக்கா

காமரு குயில்களும் கூவு மாலோ! கணமயில் அவைகலந்தாலு மாலோ

ஆமரு வினநிரை மேய்க்க நீபோக்கு ஒருபக லாயிர மூழி யாலோ தாமரைக்

கண்கள்கொண் டீர்தி யாலோ! தகவிலை தகவிலையே நீ கண்ணா.

விளக்க உரை

(3914)

தகவிலை தகவிலை யேநீ கண்ணா! தடமுலை புணர் தொறும் புணற்ச்சிக் காரா

சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை மூழ்க்கச் சூழ்ந்தது கனவென நீங்கி யாங்கே

அகவுயிர் அகமதந்தோறும் உள்புக் காவியின் பரமல்ல வேட்கை யந்தோ

மிகமிக இனியுன்னைப் பிரிவை யாமால் வீவநின் பசுநிரை மேய்க்கப் போக்கே.

விளக்க உரை

(3915)

வீவன்நின் பசுநிரை மேய்க்கப் போக்கு வெவ்வுயிர் கொண்டென தாவி வேமால்

யாவரும் துணையில்லை யானி ருந்துன் அஞ்சன மேனியை யாட்டம் காணேன்

போவதன் றொருபகல் நீய கன்றால் பொருகயற் கண்ணிணை நீரும் நில்லா

சாவதிவ் வாய்க்குலத் காய்ச்சி யோமாய்ப் பிறந்தவித் தொழுத்தையோம் தனிமை தானே.

விளக்க உரை

(3916)

தொழுத்தையோம் தனிமையும் துணைபிரிந்தார் துயரமும் நினைகிலை கோவிந் தாநின்

தொழுத்தனில் பசுக்களை யேவி ரும்பித் துறந்தெம்மையிட்டு அவை மேய்க்கப் போதி

பழுத்தநல் லமுதினின் சாற்று வெள்ளம் பாவியேன் மனமகந் தோறு முள்புக்

கழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி நினைதொறும் ஆவிவேமால்.

விளக்க உரை

(3917)

பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் பகல்நிரை மேய்க்கிய போய கண்ணா!

பிணியவிழ் மல்லிகை வாடை தூவப் பெருமத மாலையும் வந்தின் றாலோ

மணிமிகு மார்வினில் முல்லைப் போதென் வனமுலை கமழ்வித்துன் வாயமு தம்தந்து

அணிமிகு தாமரைக் கையை யந்தோ அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய்!

விளக்க உரை

(3918)

அடிச்சி யோம்தலை மிசைநீ யணியாய் ஆழியங் கண்ணா! உன் கோலப் பாதம்

பிடித்தது நடுவுனக் கரிவை மாரும் பலரது நிற்கவெம் பெண்மை யாற்றோம்

வடித்தடங் கண்ணிணை நீரும் நில்லா மனமும்நில் லாவெமக் கதுதன் னாலே

வெடிப்புநின் பசு நிரை மேய்க்கப் போக்கு வேம் எமது உயிர் அழல் மெழுகில் ளுக்கே

விளக்க உரை

(3919)

வேமெம துயிரழல் மெழுகில் ளுக்கு வெள்வளை மேகலை கழன்று வீழ

தூமலர்க் கண்ணிணை முத்தம் சோரத் தூணைமுலை பயந்து என தோள்கள் வாட

மாமணி வண்ணா உன்செங்கமல வண்ணமென் மலரடி நோவ நீபோய்

ஆமகிழ்ந் துகந்தவை மேய்க்கின் றுன்னோடு அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே?

விளக்க உரை

(3920)

அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொ லாங்கென்று ஆழுமென் னாருயிர் ஆன்பின் போகேல்

கசிகையும் வேட்கையும் உள்க லந்து கலவியும் நலியுமென் கைகழி யேல்

வசிசெயுன் தாமரைக் கண்ணும் வாயும் கைகளும் பீதக வுடையும் காட்டி

ஒசிசெய்நுண் ணிடையிள ஆய்ச்சி யர்நீ உகக்குநல் லவரொடும் உழித ராயே.

விளக்க உரை

(3921)

உகக்குநல்லவரொடுமுழிதந்து உன்தன் திருவுள்ளமிடர்கெடுந்தொறும் நாங்கள்

வியக்கவின்புறுதும்எம்பெண்மையாற்றோரும் எம்பெருமான் பசுமேய்க்கப்போகேல்

மிகப்பலவகரர்கள் வேண்டுருவங்கொண்டு நின்றுழிதருவர்கஞ்சனேவ

அகப்படிலவரொடும் நின்னொடாங்கே அவத்தங்கள் விளையுமென்சொற்கொளந்தொ!

விளக்க உரை

(3922)

அவத்தங்கள் விளையுமென் சொற்கொள் அந்தோ அசுரர்கள் வங்கையர் கஞ்ச னேவத்

தவத்தவர் மறுக நின்றுழி தருவர் தனிமையும் பெரிதுனக்கு இராமனையும்

உவர்த்தலை உடந்திரி கிலையு மென்றென்று ஊடுற வென்எ டை யாவிவேமால்

திவத்திலும் பசுநிரை மேய்ப்பு வத்தி செங்கனி வாயெங்கள் ஆயர் தேவே.

விளக்க உரை

(3923)

செங்கனி வாயெங்கள் ஆயர் தேவு அத்திருவடி திருவடி மேல் பொருநல்

சங்கணி துறைவன் வண்தென் குருகூர் வண்சட கோபன்சொல் லாயி ரத்துள்

மங்கைய ராய்ச்சிய ராய்ந்த மாலை அவனொடும் பிரிவதற் கிரங்கி தையல்

அங்கவன் பசுநிரை மேய்ப்பொ ழிப்பான் உரைத்தன இவையும்பத் தவற்றின் சார்வே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain