ஏழாந் திருமொழி

(3957)

செங்சொற் கவிகாள். உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை

வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து என்

நெஞ்சு முயிரு முள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்

நெஞ்சு முயிரும் அவைடுண்டு தானே யாகி நிறைந்தானே

விளக்க உரை

(3958)

தானே யாகி நிறைந்தெல்லா உலகும் உயிரும் தானேயாய்

தானே யானென் பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்

தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலை

கோனே யாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே

விளக்க உரை

(3959)

என்னை முற்றும் உயிருண்டென் மாய ஆக்கை யிதனுள்புக்கு

என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்

தென்னன் திருமா லிருஞ்சோலைத் திசைகை கூப்பிச் தேர்ந்தயான்

இன்னம் போவே னேகொலோ. எங்கொல் அம்மான் திருவருளே?

விளக்க உரை

(3960)

என்கொல் அம்மான் திருவருள்கள்? உலகும் உயிரும் தானேயாய்

நன்கென் னுடலம் கைவிடான் ஞாலத் தூடே நடந்துழக்கி

தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை

நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே

விளக்க உரை

(3961)

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த

எண்ணா தனகள் எண்ணும்நன் முனிவ ரின்பம் தலைசிறப்ப

பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடி

தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே

விளக்க உரை

(3962)

திருமாலிருஞ்சோலையானே ஆகிச் செழுமூ வுலகும் தன்

ஒருமா வயிற்றி னுள்ளேவைத்து ஊழி யூழி தலையளிக்கும்

திருமாலென்னை யாளுமால் சிவனும் பிரமனும்காணாது

அருமா லெய்தி யடிபரவ அருளை யீந்த அம்மானே

விளக்க உரை

(3963)

அருளை ஈயென் அம்மானே. என்னும் முக்கண் அம்மானும்

தெருள் காள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்

இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை

மருள்கள் கடியும் மணிமலை திருமாலிருஞ்சோலைமலையே

விளக்க உரை

(3964)

திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற் கடலே என்தலையே

திருமால்வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே

அருமா மாயத் தெனதுயிரே மனமே வாக்கே கருமமே

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே.

விளக்க உரை

(3965)

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகெல்லாம்

ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்

ஆழி வண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை

வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்கவொட்டே

விளக்க உரை

(3966)

மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய

நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே

பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே

விளக்க உரை

(3967)

மானாங்கார மனம்கெட ஐவர் வன்கை யர்மங்க

தானாங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானை

தேனாங் காரப் பொழில்குருகூர்ச் சடகோபன்சொல்லாயிரத்துள்

மானாங்காரத்திவைபத்தும் திருமாலிருங்சோலைமலைக்கே

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain