முதல் திருமொழி

(3781)

கொண்டபெண்டிர்மக்களுற்றார் சுற்றத்தவர்பிறரும்

கண்டதோடுபட்டதல்லால் காதல்மற்றியதுமில்லை

எண்டிசையுங்கீழும்மேலும் முற்றவமுண்டபிரான்

தொண்டரோமாயுய்யலல்லால் இல்லைகண்டீர்துணையே.

விளக்க உரை

(3782)

துணையுஞ்சார்வுமாகுவார்போல் சுற்றத்தவர்பிறரும்*

அணையவந்தவாக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்*

கணையொன்றுலேயேழ்மரமுமெய்த எங்கார்முகிலே*

புணையென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்பொருளே*

விளக்க உரை

(3783)

பொருள்கையுண்டாய்ச்செல்லக்காணில் போற்றினெற்றேழுவர்

இருள்கொள்துன்பத்திமைகாணில் என்னேயென்பாருமில்லை

மருள் கொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு

அருள் கொளாளாயுய்யவல்லால் இல்லைகண்டீரரணே.

விளக்க உரை

(3784)

அரணமாவரற்றகாலைக்கு என்றென்றமைக்கப்பட்டார்

இரணங்கொண்ட தெப்பராவர் இன்றியிட்டலுநஃதே

வருணித்தென்னே வடமதுரைப்பிறந்த வன்வண்புகழே

சரணென்றுய்யப்பபோகிலல்லால் இல்லைகண்டீர்சதிரே.

விளக்க உரை

(3785)

சதிரமென்று நம்மைத்தாமே சம்மதித்தின்மொழியார்

மதுரபோகம்துற்றவரே வைகிமற்றொன்றுறுவர்

அதிகொள்செய்கையசுரர்மங்க வடமதுரைப்பிறந்தாற்கு

எதிர்கொள்ளாயுய்யலல்லால் இல்லைகண்டீரின்பமே.

விளக்க உரை

(3786)

இல்லைகண் டீரின்பமந்தோ உள்துநினையாதே

தொல்லையார்களெத்தனைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்

மல்லைமூதூர் வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே

சொல்லியுய்யப் போகிலல்லால் மற்றொன்றில்லை சுருக்கே.

விளக்க உரை

(3787)

மற்றொன்றில்லை சுருங்கச்சொன்னோம் மாநிலத் தெவ்வுயிருக்கும்

சிற்றவேண்டா சிந்திப்பேயமையும் கண்டீர் களந்தோ

குற்றமன் றெங்கள் பெற்றத்தாயன் வடமதுரைப் பிறந்தான்

குற்றிமில் சீர்கற்றுவைதல் வாழ்தல் கண்டீர்குணயே.

விளக்க உரை

(3788)

வாழ்தல்கண்டீர் குணமிதந்தோ மாயவண்டிபரலி

போழ்துபோகவுள்ளநிற்கும் புன்மையிலாதவர்க்கு

வாழ்துணையா வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே

வீழ்துணையாப்போமிதனில் யாதுமில்லைமிக்கதே.

விளக்க உரை

(3789)

யாதுமில்லை மிக்கதனில் என்றென்றது கருதி

காதுசெய்வான் கூதைசெய்து கடைமுறை வாழ்க்கை யும்போம்

மாதுகிலின் கொடிக் கொள்மாட வடமதுரைப் பிறந்த

தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர்சரணே.

விளக்க உரை

(3790)

கண்ணனல்லாலில்லை கண்டீர்சரண் அதுநிற்கவந்து

மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப்பிறந்தான்

திண்ணமாநும்முடைமையுண்டேல் அவனடிசேர்த்துய்மினோ

எண்ணவேண்டாநும்மதாதும் அவனன்றிமற்றில்லையே.

விளக்க உரை

(3791)

ஆதுமில்லைமற்றவனில் என்றதுவே துணிந்து

தாதுசேர்தோள்கண்ணனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன

தீதிலாதவொண்டமிழ்கள் இவையாயிரத்துளிப்பத்தும்

ஓதவல்லபிராக்கள் நம்மையாளுடையார்கள்பண்டே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain