ஐந்தாந் திருமொழி

(3825)

இன்னுயிர்ச்சேவலும் நீருங்கூவிக்கொண்டிங்கெத்தனை

என்னுயிர்நோவமிழற்றேன்மின் குயிற்பேடைகாள்

என்னுயிர்க்கண்ணபிரானை நீர்வரக்கூவகிலீர்

என்னுயிர்கூலிக்கொடுப்பார்க்கும் இத்தனைவேண்டுமோ.

விளக்க உரை

(3826)

இத்தனைவேண்டுவதன்றந்தொ அன்றிற்பேடைகாள்

எத்தனைநீரும்நுஞ்சேவலும் கரைந்தேங்குதிர்

வித்தகண்கோவிந்தன் மெய்யனல்லனொருவர்க்கும்

அத்தனையாமினி யென்னுயிரவன்கையநே.

விளக்க உரை

(3827)

அவன்கையதேயெனதாருயிர் அன்றிற்பேடைகாள்

எவஞ்சொல்லிநீர் குடைந்தாடுதிர் புடைசுழவே

தவஞ்செய்தில்லா வினையாட்டியேனுயிர் இங்குண்டோ?

எவஞ்சொல்லிநிற்றும் நும்மேங்குகூக்குரல் கேட்டுமே.

விளக்க உரை

(3828)

கூக்குரல்கேட்டும் நங்கண்ணன்மாயன் வெளிப்படான்

மெற்கிளைகொள்ளேன்மின் நீருஞ்சேவலுங்கோழிகாள்!

வாக்கும்மனமுங் கருமமும்நமக்காங்கநே

ஆக்கையுமாலியும் அந்தரம்நின்றுழலுமே

விளக்க உரை

(3829)

அந்தரநின்றுழல்கின்ற யானுடைப்பூவைகாள்!

நுந்திறத்தேதுமிடையில்லை குழறேன்மினோ

இந்திரஞாலங்கள்காட்டி யிவ்வேழுலகுங்கொண்ட

நந்திருமார்பன் நம்மாவியுண்ணநன்கெண்ணினான்.

விளக்க உரை

(3830)

நன்கெண்ணிநான்வளர்த்த சிறுகிளிப்பைதலே!

இன்குரல்நீமிழற்றேல் என்னாருயிர்க்காகுத்தன்

நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன்கைகாவினன்

நின்பசுஞ்சாமநிற்ததன் கூட்டுண்டுநீங்கினான்.

விளக்க உரை

(3831)

கூட்டுண்டுநீங்கிய கோலத்தாமரைக்கட்செவ்வாய்

வாட்டமிலென்கருமாணிக்கம் கண்ணன்மாயன்போல்

கோட்டியவில்லோடு மின்னுமேகக்குழாங்கள்காள்

காட்டேன்மின்நும்முரு என்னுயிர்க்கதுகாலனே.

விளக்க உரை

(3832)

உயிர்க்கதுகாலனென்று உம்மையானிரந்தேற்கு நீர்

குயில்பைதல்காள் கண்ணன்நாமமேகுழறிக் கொன்றீர்

தயிர்ப்பழஞ்சோற்றோடு பாலடிசிலும் தந்து சொல்

பயிற்றியநல்வளமூட்டினீர் பண்புடையீரே.

விளக்க உரை

(3833)

பண்புடைவண்டொடுதும்பிகாள் பண்மிழற்றேல்மின்

புண்புரைவேல்கொடு குத்தாவொக்கும்நும்மின்குரல்

தண்பெருநீர்த்தடந்தாமரை மலர்ந்தலொக்குங்

கண்பெருகண்ணன் நம்மாவியுண்டெழுநண்ணினான்.

விளக்க உரை

(3834)

எழ நண்ணிநாமும் நம்வானநாடனோடொன்றினோம்

பழனநன்னாரைக் குழாங்கள்காள் பயின்றென்னினி

இழைநல்லவாக்கையும் பையவேபுயக்கற்றது

தழைநல்லவின் பம்தலைப்பெய்து எங்குந்தழைக்கலே.

விளக்க உரை

(3835)

இன்பந்தலைப்பெய்தெங்கும்தழைத்த பல்லுழிக்கு

தன்புகழேத்தத் தனக்கருள்செய்தமாயனை

தென்குருகூர்ச்சடகோபன் சொல்லாயிரத்துள்ளிவை

ஒன்பதோடொன்றுக்கும், மூவுலகுமுருகுமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain