எட்டாந் திருமொழி

(3858)

அறுக்கும்வினையாயின ஆகந்தவனை

நிறுத்தும்மனத் தொன்றிய சிந்தையினார்க்கு

வெறித்தண்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

குறுக்கும்வகையுண்டுகோலோ கொடியேற்கே.


விளக்க உரை

(3859)

கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்

வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்

நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்

அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ.


விளக்க உரை

(3860)

எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்

கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்

நவையில் திநாரணன்சேர் திருநாவாய்

அவையுள்புகலாவதோர் நாளறியேனே.


விளக்க உரை

(3861)

நாளேலறியேன் எனக்குள்ளநானும்

மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்

நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா.


விளக்க உரை

(3862)

மணாளன்மலர்மங்கைக்கும் மண்மடந்தைக்கும்

கண்ணாளனுலகத்துயில் தேவர்கட்கெல்லாம்

வண்ணாளன்விரும்பிறையும் திருநாவாய்

கண்ணாரக்களிக்கின்றது இங்கென்றுகொல்கண்டே.


விளக்க உரை

(3863)

கண்டேகளிக்கின்றது இங்கென்றுகொல்கண்கள்

தொண்டேபுனக்காயொழிந்தேன் துரிசின்றி

வண்டார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

கொண்டே யுறைகின்ற எங்கோவலர்கோவே.


விளக்க உரை

(3864)

கோவாகிய மாவலியைநிலங்கொண்டாய்

தேவாசுரம்செற்றவனே திருமாலே

நாவாயுறைகின்ற என்னாரணநம்பி

ஆவாலவடியானி னென்றருளாயே.


விளக்க உரை

(3865)

அருளாதொழிவாயருள்செய்து அடியேனைப்

பொருளாக்கி உன்பொன்னடிக்கீழ்புகவைப்பாய்

மருளேயின்றி உன்னையென்னெஞ்சத்திருத்தும்

தேருளேதரு தென்திருநாவாயென்தேவே.


விளக்க உரை

(3866)

தேவர் முனிவர்க்கென்றும் காண்டற்கரியன்

மூவர்முதல்வன் ஒருமூவுலகாளி

தேவன்விரும்பி யுறையும் திருநாவாய்

யாவரணுகப்பெறுவார் இனியந்தோ.


விளக்க உரை

(3867)

அந்தோவணுகப்பெறுநாள் என்றெப்போதும்

சிந்தைகலங்கித் திருமாவென்றழைப்பன்

கொந்தார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்

வந்தேயுறைகின்ற எம்மாமணிவண்ணா.


விளக்க உரை

(3868)

வண்ணம்மணிமாட நன்னாவாயுள்ளானை

திண்ணம்மதிள் தென்குருகூர்ச்சடகோபன்

பண்ணார்தமிழ் ஆயிரத்திப்பத்தும்வல்லார்

மண்ணாண்டு மணங்கமழ்வர்மல்லிகையே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain