ஏழாந் திருமொழி

(3737)

இருந்தும், வியந்து என்னைத்தன் டிபான் அழக்கீழ், என்று

அருத்தித்து, எனைத்து ஓர் பல நாள் அர்த்தேற்கு,

பொருத்தம் உடை வாமன்ன் தான் புகுந்து, என் – தன்

கருத்தை உற, வீற்றிருந்தாள் – கண்டுகொண்டே.

விளக்க உரை

(3738)

இருந்தான் கண்டுகொண் டெனதேழை நெஞ்சாளும்,

திருந்தாத வோரைவ ரைத்தேய்ந் தறமன்னி,

பெருந்தாள் களிற்றுக் கருள்செய்த பெருமான்,

தருந்தான் அருள்தான் இனியான் அறியேனே.

விளக்க உரை

(3739)

அருள்தா னினியான் அறியேன் அவனென்னுள்,

இருள்தான் அறவீற் றிருந்தான் இதுவல்லால்,

பொருள்தா னெனில்மூ வுலகும் பொருளல்ல,

மருள்தானீதோ? மாய மயக்கு மயக்கே.

விளக்க உரை

(3740)

மாய மயக்குமயக் கானென்னை வஞ்சித்து,

ஆயன் அமரர்க் கரியே றெனதம்மான்,

தூய சுடர்ச்சோதி தனதென்னுள் வைத்தான்,

தேயம் திகழும்தன் திருவருள் செய்தே.

விளக்க உரை

(3741)

திகழுந்தன் திருவருள் செய்துல கத்தார்,

புகழும் புகழ்தா னதுகாட்டித் தந்து,என்னுள்

திகழும் மணிக்குன்ற மொன்றே யொத்துநின்றான்,

புகழும் புகழ்மற் றெனக்குமோர் பொருளே?

விளக்க உரை

(3742)

பொருள்மற் றெனக்குமோர் பொருள்தன்னில் சீர்க்கத்

தருமேல்,பின் யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்?,

கருமா ணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்,

திருமார்பு கால்கண்கை செவ்வாய் உந்தியானே.

விளக்க உரை

(3743)

செவ்வாயுந்தி வெண்பல் சுடர்க்குழை, தன்னோடு

எவ்வாய்ச் சுடரும் தம்மில்முன் வளாய்க்கொள்ள,

செவ்வாய் முறுவலோ டெனதுள்ளத் திருந்த,

அவ்வா யன்றியான் அறியேன்மற் றருளே.

விளக்க உரை

(3744)

அறியேன்மற் றருளென்னை யாளும் பிரானார்,

வெறிதே யருள்செய்வர் செய்வார்கட் குகந்து,

சிறியே னுடைச்சிந்தை யுள்மூ வுலகும்,தம்

நெறியா வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரே.

விளக்க உரை

(3745)

வயிற்றிற்கொண்டு நின்றொழிந் தாரும் யவரும்,

வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுல கும்,தம்

வயிற்றிற்கொண்டு நின்றவண் ணம்நின்ற மாலை,

வயிற்றிற்கொண்டு மன்ன வைத் தேன்மதி யாலே.

விளக்க உரை

(3746)

வைத்தேன் மதியா லெனதுள்ளத் தகத்தே,

எய்த்தே யொழிவேனல் லேனென்றும் எப்போதும்,

மொய்த்தேய் திரைமோது தண்பாற் கடலுளால்,

பைத்தேய் சுடர்ப்பாம் பணைநம் பரனையே.

விளக்க உரை

(3747)

சுடர்ப்பாம் பணைநம் பரனைத் திருமாலை,

அடிச்சேர் வகைவண் குருகூர்ச் சடகோபன்,

முடிப்பான் சொன்னவா யிரத்திப்பத் தும்சன்மம்

விட,தேய்ந் தறநோக்கும் தன்கண்கள் சிவந்தே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain