எட்டாந் திருமொழி

(3748)

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து,உள்ளே

வெண்பல் இலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்,

கொண்டல் வண்ணன் சுடர்முடியன் நான்கு தோளன் குனி சார்ங்கன்,

ஒண்சங் கதைவா ளாழியான் ஒருவன் அடியே னுள்ளானே.

விளக்க உரை

(3749)

அடியே னுள்ளான் உடலுள்ளான் அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,

படியே யிதுவென் றுரைக்கலாம், படியன் அல்லன் பரம்பரன்,

கடிசேர் நாற்றத் துள்ளாலை இன்பத் துன்பக் கழிநேர்மை,

ஒடியா இன்பப் பெருமையோன் உணர்வி லும்ப ரொருவனே.

விளக்க உரை

(3750)

உணர்வி லும்ப ரொருவனை அவன தருளா லுறல்பொருட்டு,என்

உணர்வி னுள்ளே யிருத்தினேன் அதுவும் அவன தின்னருளே,

உணர்வும் உயிரும் உடம்பும்மற் றுலப்பி லனவும் பழுதேயாம்,

உணர்வைப் பெறவூர்ந் திறவேறி யானும் தானா யொழிந்தானே.

விளக்க உரை

(3751)

யானும் தானா யொழிந்தானை யாதும் யவர்க்கும் முன்னோனை,

தானும் சிவனும் பிரமனும் ஆகிப் பணைத்த தனிமுதலை,

தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகித் தித்தித்து,என்

ஊனி லுயிரி லுணர்வினில் நின்ற வொன்றை யுணர்ந்தேனே.

விளக்க உரை

(3752)

நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக் கதனுள் நேர்மை அதுவிதுவென்று,

ஒன்றும் ஒருவர்க் குணரலாகா துணர்ந்தும் மேலும் காண்பரிது

சென்று சென்று பரம்பரமாய் யாது மின்றித் தேய்ந்தற்று,

நன்று தீதென் றறிவரிதாய் நன்றாய் ஞானம் கடந்ததே.

விளக்க உரை

(3753)

நன்றாய் ஞானம் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,

ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,

சென்றாங் கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்,

அன்றே யப்போ தேவீடு அதுவே வீடு வீடாமே.

விளக்க உரை

(3754)

அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறி,

எதுவே தானும் பற்றின்றி யாது மிலிக ளாகிற்கில்,

அதுவே வீடு வீடு பேற்றின்பந் தானும் அதுதேறாது,

எதுவே வீடே தின்பம்? என்றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே.

விளக்க உரை

(3755)

எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென் றில்லாத் தாரும் புறத்தாரும்

மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம் போகும் போது,உன் மத்தர்போல்

பித்தே யேறி யனுராகம் பொழியும் போதெம் பெம்மானோடு

ஒத்தே சென்று,அங்குளம்கூடக் கூடிற் றாகில் நல்லுறைப்பே.

விளக்க உரை

(3756)

கூடிற் றாகில் நல்லுறைப்புக் கூடாமையைக் கூடினால்,

ஆடல் பறவை யுயர்கொடியெம் ஆயனாவ ததுவதுவே,

வீடைப் பண்ணி யொருபரிசே எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,

ஓடித் திரியும் யோகிகளும் உளரு மில்லை யல்லரே.

விளக்க உரை

(3757)

உளரு மில்லை யல்லராய் உளரா யில்லை யாகியே,

உளரெம் மொருவர் அவர்வந்தென் உள்ளத் துள்ளே யுறைகின்றார்

வளரும் பிறையும் தேய்பிறையும் போல் அசைவும் ஆக்கமும்,

வளரும் சுடரும் இருளும்போல் தெருளும் மருளும் மாய்த்தோமே.

விளக்க உரை

(3758)

தெருளும் மருளும் மாய்த்துத்தன் திருந்து செம்பொற் கழலடிக்கீழ்

அருளி யிருத்தும் அம்மானாம் அயனாம் சிவனாம்,திருமாலால்

அருளப் பட்ட சடகோபன் ஓரா யிரத்து ளிப்பத்தால்,

அருளி யடிக்கீ ழிருத்தும்நம் அண்ணல் கருமா ணிக்கமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain