ஏழாந் திருமொழி

(3517)

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,

திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.

விளக்க உரை

(3518)

ஊரும் நாடும் உலகமும் தன்னைப்போல் அவனுடைய

பேரும் தார்களுமே பிதற்ற, கற்பு வான் இடறி,

சேரும் நல் வளம் சேர் பழனத் திருக்கோளூர்க்கே

போரும்கொல், உரையீர், கொடியேன்கொடி-பூவைகளே?

விளக்க உரை

(3519)

பூவைபைங்கிளிகள் பந்துதூதைபூம்பட்டில்கள்*

யாவையும்திருமால் திருநாமங்களே கூவியெழும் * என்

பாவைபோயினித் தண்பழனத்திருக்கோளூர்க்கே*

கோவைவாய்துடிப்ப மழைக்கண்ணொடென் செய்யுங்கொலோ?

விளக்க உரை

(3520)

கொல்லை யென்பர்கொ லோகுணம் மிக்கனள் என்பர்கொலோ,

சில்லை வாய்ப்பெண் டுகளயற் சேரியுள் ளாருமெல்லே,

செல்வம் மல்கி யவன் கிடந்த திருக்கோ ளூர்க்கே,

மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.

விளக்க உரை

(3521)

மேவி நைந்து நைந்துவிளை யாடலுறா ளென்சிறுத்

தேவிபோய், இனித்தன் திருமால் திருக்கோ ளூரில்,

பூவியல் பொழிலும் தடமும் அவன்கோ யிலுங்கண்டு,

ஆவியுள் குளிர எங்ஙனே யுகக்குங்கொல் இன்றே?

விளக்க உரை

(3522)

இன்றெனக் குதவா தகன்ற இளமான் இனிப்போய்,

தென்திசைத் திலத மனைய திருக்கோ ளூர்க்கே சென்று,

தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு,

நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.

விளக்க உரை

(3523)

மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,

அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,

செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,

ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே?

விளக்க உரை

(3524)

ஒசிந்த நுண்ணிடை மேல்கையை வைத்து நொந்துநொந்து,

கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண நீர்த்துளும்பச் செல்லுங்கொல்,

ஒசிந்த வொண்மல ராள்கொழுநன் திருக்கோ ளூர்க்கே,

கசிந்த நெஞ்சின ளாயெம்மை நீத்தஎ ம் காரிகையே?

விளக்க உரை

(3525)

காரியம் நல்லன களவை காணிலென் கண்ணனுக்கென்று,

ஈரியா யிருப்பாளி தெல்லாம் கிடக்க இனிப்போய்,

சேரி பல்பழி தூயிரைப்பத் திருக்கோ ளூர்க்கே,

நேரிழை நடந்தா ளெம்மை யொன்றும் நினைத்திலளே.

விளக்க உரை

(3526)

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,

அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை,

தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே,

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.

விளக்க உரை

(3527)

வைத்த மாநிதி யாம்மது சூதனை யேயலற்றி,

கொத்த லர்பொழில் சூழ்குரு கூர்ச்சட கோபன்சொன்ன,

பத்து நூறு ளிப்பத் தவன்சேர் திருக்கோளூர்க்கே,

சித்தம் வைத்து ரைப்பார் திகழ்பொன் னுலகாள்வாரே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain