பத்தாந் திருமொழி

(3330)

ஒன்றுந் தேவு முலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று, நான்முகன் தன்னொடு தேவ ருலகோ டுயிர்படைத்தான்,

குன்றம் போல்மணி மாடம் நீடு திருக்குரு கூரதனுள்,

நின்ற ஆதிப்பி ரான்நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே.

விளக்க உரை

(3331)

நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,

வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில்,

மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்,

பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே.

விளக்க உரை

(3332)

பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,

கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்,

சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள்,

பரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே.

விளக்க உரை

(3333)

பேசநின்றசிவனுக்கும்பிரமன்தனக்கும் பிறர்க்கும்

நாயகனவனே * கபாலநன் மோக்கத்துக்கண்டுகொண்மின் *

தேசமாமதிள்சூர்ந்தழகாய திருக்குருகூரதனுள் *

ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவதிலிங்கியர்க்கே?

விளக்க உரை

(3334)

இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும் *

வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான் *

மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள் *

பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லைபோற்றுமினே.

விளக்க உரை

(3335)

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே

தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே,

சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள்,

ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே.

விளக்க உரை

(3336)

ஓடி யோடிப் பல்பிறப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,

பாடி யாடிப் பணிந்துபல்படிகால் வழியே றிக்கண்டீர்,

கூடி வானவ ரேத்தனின்ற திருக்குரு கூரதனுள்,

ஆடு புட்கொடி யாதி மூர்த்திக் கடிமை புகுவதுவே.

விளக்க உரை

(3337)

புக்கு அடி மையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை

நக்கபிரானுமன் றுய்யக்கொண்டது நாராயணனருளே

கொக்கலர் தடந்தாழை வேலித் திருக்குருகூரதனுள்

மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே.

விளக்க உரை

(3338)

விளம்பும் ஆறு சமய மும்அ வை யாகியும் மற்றும் தன்பால்,

அளந்து காண்டற் கரிய னாகிய ஆதிப்பி ரானமரும்,

வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனை,

உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக்கொண்டு போகுறிலே.

விளக்க உரை

(3339)

உறுவ தாவ தெத்தேவும் எவ்வுலக கங்களும் மற்றும்தன்பால்,

மறுவில் மூர்த்தியோ டொத்தித் தனையும் நின்றவண் ணம்நிற்கவே,

செறுவில் செந்நெல் கரும்பொ டோங்கு திருக்குரு கூரதனுள்

குறிய மாணுரு வாகிய நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.

விளக்க உரை

(3340)

ஆட்செய்த தாழிப்பி ரானைச் சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்

நாட்க மழ்மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்,

வேட்கை யால்சொன்ன பாடல் ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,

மீட்சி யின்றி வைகுந்த மாநகர் மற்றது கையதுவே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain