பதினோராந்திருமொழி

(852)

இரந்துரைப்ப துண்டுவாழி ஏமநீர்தி றத்தமா

வரர்தரும்தி ருக்குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர்

பரந்தசிந்தை யொன்றிநின்று நின்னபாத பங்கயம்

நிரந்தரம்நி னைப்பதாக நீநினைக்க வேண்டுமே.

விளக்க உரை

(853)

விளவுவிலாத காதலால் விளங்குபாத போதில்வைத்து

உள்ளுவேன தூனநோயொ ழிக்குமாதெ ழிக்குநீர்

பள்ளிமாய பன்றியாய வென்றிவீரகுன்றினால்

துள்ளுநீர்வ ரம்புசெய்த தோன்றலொன்று சொல்லிடே.

விளக்க உரை

(854)

திருக்கலந்து சேருமார்ப தேவதேவ தேவனே

இருக்கலந்த வேதநீதி யாகிநின்ற நின்மலா

கருக்கலந்த காளமேக மேனியாய நின்பெயர்

உருக்கலந்தொ ழிவிலாது ரைக்குமாறு ரைசெயே.

விளக்க உரை

(855)

கடுங்கவந்தன் வக்கரன்க ரன்முரன்சி ரம்மவை

இடந்துகூறு செய்தபல்ப டைத்தடக்கை மாயனே

கிடந்திருந்து நின்றியங்கு போதும்நின்ன பொற்கழல்

தொடர்ந்துவிள்வி லாததோர்தொ டர்ச்சிநல்க வேண்டுமே.

விளக்க உரை

(856)

மண்ணையுண்டு மிழ்ந்துபின்னி ரந்துகொண்ட ளந்துமண்

கண்ணுளல்ல தில்லையென்று வென்றகால மாயினாய்

பண்ணைவென்ற விஞ்சொல்மங்கை கொங்கைதங்கு பங்கயக்

கண்ணநின்ன வண்ணமல்ல தில்லையெண்ணும் வண்ணமே

விளக்க உரை

(857)

கறுத்தெதிர்ந்த காலநேமி காலனோடு கூடஅன்

றறுத்தவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்

தொறுக்கலந்தவூனமஃதொ ழிக்கவன்று குன்றம்முன்

பொறுத்தநின்பு கழ்க்கலாலொர் நேசமில்லை.

விளக்க உரை

(858)

காய்சினத்த காசிமன்னன் வக்கரன்ப வுண்டிரன்

மாசினத்த மாலிமாஞ்சு மாலிகேசி தேனுகன்

நாசமுற்று வீழநாள்க வர்ந்தநின்க ழற்கலால்

நேசபாச மெத்திறத்தும் வைத்திடேனெம் மீசனே.

விளக்க உரை

(859)

கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்

நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்

வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே.

விளக்க உரை

(860)

சுருக்குவாரை யின்றியேசு ருங்கினாய்சு ருங்கியும்

பெருக்குவாரை யின்றியேபெ ருக்கமெய்து பெற்றியோய்

செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்ததேவ தேவனென்று

இருக்குவாய்மு னிக்கணங்க ளேத்தயானு மேத்தினேன்.

விளக்க உரை

(861)

தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்

மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்

நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்

பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain