பத்தாந் திருமொழி

(3110)

கிளரொளியிளமை கெடுவதன்முன்னம்,

வளரொளிமாயோன் மருவியகோயில்,

வளரிளம்பொழில்சூழ் மாலிருஞ்சோலை,

தளர்விலராகில் சார்வதுசதிரே.

விளக்க உரை

(3111)

சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,

அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,

மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,

பதியதுவேத்தி யெழுவதுபயனே.

விளக்க உரை

(3112)

பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே *

புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் *

மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை *

அயன்மலையடைவது அதுகருமமே.

விளக்க உரை

(3113)

கரும வன் பாசம் கழித்து உர்ன்று உய்யவே,

பெருமலை எடுத்தான் பீடு உறை கோயில்

வரு மழை தவழும் மாலிருஞ்சோலைத்

திருமலை அதுவே, அடைவது திறமே.

விளக்க உரை

(3114)

திறமுடைவலத்தால் தீவினைபெருக்காது *

அறமுயலாழிப் படையவன் கோயில் *

மறுவில் வண்சுனைசூழ் மாலிருஞ்சோலை *

புறமலைசாரப் போவதுகிறியே.

விளக்க உரை

(3115)

கிறியெனநினைமின் கீழ்மைசெய்யாதே *

உறியமர்வெண்ணெய் உண்டவன்கோயில் *

மறியொடுபிணைசேர் மாலிருஞ்சோலை *

நெறிபடவதுவே நினைவதுநலமே.

விளக்க உரை

(3116)

நலமெனநினைமின் நரகழுந்தாதே *

நிலமுனமிடத்தான் நீடுறைகோயில் *

மலமறுமதிசேர் மாலிருஞ்சோலை *

வலமுறையெய்தி மருவுதல்வலமே.

விளக்க உரை

(3117)

வலஞ்செய்து, வைகல் வலம் கழியாதே,

வலஞ்செய்யும் ஆய – மாயவன் கோயில்,

வலஞ்செய்யும் வானோர் மாலிருஞ்சோலை,

வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.

விளக்க உரை

(3118)

சூதென்றுகளவும் சூதும்செய்யாதே *

வேதமுன்விரித்தான் விரும்பியகோயில் *

மாதுறுமயில்சேர்மாலிருஞசோலை *

போதவிழ்மலையே புகுவதுபொருளே.

விளக்க உரை

(3119)

சூது என்று களவும் சூதும் செய்யாதே,

வேதம் முன் விரித்தான் விரும்பிய கோயில்,

மாது உறு மயில் சேர் மாலிருஞ் சோலைப்

போது அவிழ் மலையே, புகுவது பொருளே.

விளக்க உரை

(3120)

பொருள் என்று இவ் உலகம் படைத்தவன் புகழ்மேல்

மருள் இல் வண் குருகூர் வண் சடகோபன்

தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்து

அருளுடையவன் – தாள் அணைவிக்கும் முடித்தே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain