ஏழாந் திருமொழி

(3075)

கேசவன்தமர்க்கீழ்மே லெமரேழெழுபிறப்பும்,

மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா,

ஈசனென்கருமாணிக்கமென் செங்கோலக்கண்ணன்

விண்ணோர் நாயகன், எம்பிரானெம்மான்நாராயணனாலே

விளக்க உரை

(3076)

நாரணன்முழுவேழுலகுக்கும் நாதன்வேதமயன்,

காரணம்கிரிசை கருமமிவைமுதல்வனெந்தை,

சீரணங்கமரர்பிறர் பலரும்தொழுதேத்தநின்று,

வாரணத்தைமருப்பொசித்த பிரானென்மாதவனே.

விளக்க உரை

(3077)

மாதவனென்றதேகொண் டென்னையினியிப்பால்பட்டது,

யாதவங்களும்சேர்க்கொடேனென் றென்னுள்புகுந்திருந்து,

தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கட்குன்றம்,

கோதவமிலென்கன்னற்கட்டி யெம்மானென்கோவிந்தனே

விளக்க உரை

(3078)

கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென் றென்றேகுனித்து

தேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி, என்னைக் கொண்டென்

பாவந்தன்னையும் பாறக்கைத் தெமரேழெழு பிறப்பும்,

மேவும்தன்மைய மாக்கினான் வல்லனெம் பிரான்விட்டுவே.

விளக்க உரை

(3079)

விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள்,

விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு,

விட்டிலங்குமதியம்சீர் சங்குசக்கரம்பரிதி,

விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.

விளக்க உரை

(3080)

மதுசூதனையன்றிமற்றிலேனென் றெத்தாலும்கருமமின்றி,

துதிசூழ்ந்தபாடல்கள் பாடியாட நின்றூழியூழிதொறும்,

எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்புமெனக்கேயருள்கள்செய்ய,

விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.

விளக்க உரை

(3081)

திரிவிக்கிரமன்செந்தாமரைக்கணெம்மானேன்செங்கனிவாய்

உருவில்பொலிந்தவெள்ளைப்பளிங்குநிறத்தனனென்றென்று,

உள்ளிப் பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே,

மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென்வாமனனே

விளக்க உரை

(3082)

வாமனனென்மரகதவண்ணன் தாமரைக்கண்ணினன்

காமனைப்பயந்தாய், என்றென்றுன்கழல்பாடியேபணிந்து,

தூமனத்தனனாய்ப் பிறவித்துழ திநீங்க, என்னைத்

தீமனங்கெடுத்தா யுனக்கென்செய்கேனென்சிரீ தரனே.

விளக்க உரை

(3083)

சிரீஇதரன்செய்யதாமரைக்கண்ணனென்றென்றிராப்பகல்வாய்

வெரீஇ, அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து

மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்

இரீஇ, உன்னையென்னுள்வைத்தனை யென்னிருடீகேசனே.

விளக்க உரை

(3084)

இருடீகேசனெம்பிரா னிலங்கையரக்கர்க்குலம்,

முருடுதீர்த்தபிரானெம்மா னமரர்பெம்மானென்றென்று,

தெருடியாகில்நெஞ்சே,வணங்கு திண்ணமறியறிந்து,

மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே

விளக்க உரை

(3085)

பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,

எற்பரனென்னையாக்கிக் ¦ காண்டெனக்கேதன்னைத்தந்த

கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்

வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே.

விளக்க உரை

(3086)

தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,

ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,

தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,

ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.

விளக்க உரை

(3087)

வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,

கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,

பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,

பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain