ஐந்தாந் திருமொழி

(3053)

அந்தாமத்தன்புசெய் தென்னாவிசேரம்மானுக்கு,

அந்தாமவாழ்முடிசங் காழிநூலாரமுள,

செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாய்செங்கமலம்,

செந்தாமரையடிக்கள் செம்பொன்திருவுடம்பே.

விளக்க உரை

(3054)

திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,

திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,

ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,

ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே

விளக்க உரை

(3055)

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,

மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,

மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,

தன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே

விளக்க உரை

(3056)

எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,

அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,

எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,

அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே.

விளக்க உரை

(3057)

ஆராவமுதமர் யல்லாவியுள்கலந்த,

காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,

நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,

பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.

விளக்க உரை

(3058)

பலபலவேயாபரணம் பேரும்பலபலவே,

பலபலவேசோதிவடிவு பண்பெண்ணில்,

பலபலகண்டுண்டு கேட்டுற்றுமோந்தின்பம்,

பலபலவேஞானமும் பாம்பணைமேலாற்கேயோ.

விளக்க உரை

(3059)

பாம்பணைமேல்பாற்கடலுள் பள்ளியமர்ந்ததுவும்,

காம்பணைதோள்பின்னைக்கா எறுடனேழ்செற்றதுவும்,

தேம்பணையசோலை மராமரமேழெய்ததுவும்,

பூம்பிணையதண்துழாய்ப் பொன்முடியம் போரேறே.

விளக்க உரை

(3060)

பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,

தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,

என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,

சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.

விளக்க உரை

(3061)

சொல்லீரென்னம்மானை யென்னாவியாவிதனை,

எல்லையில்சீரென் கருமாணிக்கச்சுடரை,

நல்லவமுதம்பெற்றற்கரிய வீடுமாய்,

அல்லிமலர்விரையொத் தாணல்லன்பெண்ணல்லனே.

விளக்க உரை

(3062)

ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,

காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,

பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,

கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.

விளக்க உரை

(3063)

கூறுதலொன்றாராக் குடக்கூத்தவம்மானை,

கூறுதலேமேவிக் குருகூர்ச்சடகோபன்,

கூறினவந்தாதி யோராயிரத்துளிப்பத்தும்,

கூறுதல்வல்லாருளரேல் கூடுவர்வைகுந்தமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain