நான்காந் திருமொழி

(3042)

ஆடியாடி யகம்கரைந்து, இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி, எங்கும்

நாடிநாடி நரசிங்காவென்று,

வாடிவாடு மிவ்வாணுதலெ.

விளக்க உரை

(3043)

வாணுதலிம்மடவரல், உம்மைக்

காணுமாசையுள் நைகின்றாள், விறல்

வாணனாயிரந்தோள்துணித்தீர், உம்மைக்

காண நீரிரக்கமிலீரே.

விளக்க உரை

(3044)

இரக்கமனத்தோ டெரியணை,

அரக்குமெழுகு மொக்குமிவள்,

இரக்கமெழி ரிதற்கென்செய்கேன்,

அரக்கனிலங்கை செற்றீருக்கே.

விளக்க உரை

(3045)

இலங்கைசெற்றவனே! என்னும், பின்னும்

வலங்கொள்புள்ளுயர்த்தாய்! என்னும், உள்ளம்

மலங்கவெவ்வுயிர்க்கும், கண்ணீர்மிகக்

கலங்கிக்கைதொழும் நின்றிவளே.

விளக்க உரை

(3046)

இவளிராப்பகல் வாய்வெரீஇ, தன

குவளையொண்கண்ணநீர் கொண்டாள், வண்டு

திவளும்தண்ணந் துழாய்கொடீர், என

தவளவண்ணர் தகவுகளே.

விளக்க உரை

(3047)

தகவுடையவனே யென்னும், பின்னும்

மிகவிரும்பும்பிரான் என்னும், என

தகவுயிர்க்கமுதே, என்னும், உள்ளம்

உகவுருகி நின்றுள்ளுளே.

விளக்க உரை

(3048)

உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என

வள்ளலே கண்ணனேயென்னும், பின்னும்

வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்

கள்விதான்பட்ட வஞ்சனையே.

விளக்க உரை

(3049)

வஞ்சனே, என்னும் கைதொழும், தன்

நெஞ்சம்வே வநெடிதுயிர்க்கும், விறல்

கஞ்சனைவஞ்சனை செய்தீர், உம்மைத்

தஞ்சமென்றிவள் பட்டனவே.

விளக்க உரை

(3050)

பட்டபோதெழு போதறியாள், விரை

மட்டலர்தண்துழாய் என்னும், சுடர்

வட்டவாய்நுதி நேமியீர், நும

திட்டமென்கொ லிவ்வேழைக்கே.

விளக்க உரை

(3051)

ஏழைபேதை யிராப்பகல், தன

கேழிலொண்கண்ணநீர் கொண்டாள், கிளர்

வாழ்வைவேவ விலங்கை செற்றீர், இவள்

மாழைநோக்கொன்றும் வாட்டேன்மினே.

விளக்க உரை

(3052)

வாட்டமில்புகழ் வாமனனை, இசை

கூட்டிவண்சடகோபன் சொல், அமை

பாட்டோராயிரத்திப் பத்தால், அடி

குட்டலாகு மந்தாமமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain