ஐந்தாந் திருமொழி

(3165)

மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,

கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,

எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,

தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே.

விளக்க உரை

(3166)

தண்கடல் வட்டத்துள் ளாரைத் தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,

திண்கழற் காலசு ரர்க்குத் தீங்கிழைக் கும்திரு மாலை,

பண்கள் தலைக்கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்துழ லாதார்,

மண்கொள் உலகில் பிறப்பார் வல்வி னை மோத மலைந்தே.

விளக்க உரை

(3167)

மலையை யெடுத்துக்கல் மாரி காத்துப் பசுநிரை தன்னை,

தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச்சொல் லிநிறெப் போதும்,

தலையினோ டாதனம் தட்டத் தடுகுட்ட மாய்ப்பற வ ¡தார்,

அலைகொள் நரகத் தழுந்திக் கிடந்துழைக் கின்ற வம்பரே.

விளக்க உரை

(3168)

வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,

செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,

கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,

தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?

விளக்க உரை

(3169)

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்ப தற்கு,

ஆதியஞ் சோதி யுருவை அங்குவைத் திங்குப் பிறந்த,

வேத முதல்வ னைப் பாடி வீதிகள் தோறும்துள் ளாதார்,

ஓதி யுணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்ம னிசரே?

விளக்க உரை

(3170)

மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயப் பிறவி பிறந்த,

தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானை,

கனியைக் கரும்பினின் சாற்றைக் கட்டியைத் தேனை அமுதை,

முனிவின்றி ஏத்திக் குனிப்பார் முழுதுணர் நீர்மையி னாரே.

விளக்க உரை

(3171)

நீர்மை நூற்றுவர் வீய ஐவர்க் கருள்¦ சய்து நின்று,

பார்மல்கு சேனை அவித்த பரஞ்சுட ரைநினைந் தாடி.

நீர்மல்கு கண்ணின ராகி நெஞ்சம் குழைந்துநை யாதே,

ஊர்மல்கி மோடு பருப்பார் உத்தமர்க்கட் கென்செய் வாரே?

விளக்க உரை

(3172)

வார்ப்புனல் அந்தண் ணருவி வடதிரு வேங்கடத் தெந்தை,

பேர்ப்பல சொல்லிப் பிதற்றிப் பித்தரென் றேபிறர் கூற,

ஊர்ப்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்கநின் றாடி,

ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படு வாரே.

விளக்க உரை

(3173)

அமரர் தொழப்படு வானை அனைத்துல குக்கும் பிரானை,

அமரர் மனத்தினுள் யோகு புணர்ந்தவன் தன்னோடொன் றாக,

அமரத் துணியவல் லார்கள் ஒழியஅல் லாதவ ரெல்லாம்,

அமர நினைந்தெழுந் தாடி அலற்றுவ தேகரு மமே.

விளக்க உரை

(3174)

கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை,

திருமணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை,

ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளங் குழைந்தெழுந் தாடி,

பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

விளக்க உரை

(3175)

தீர்ந்த அடியவர் தம்மைத்திருத் திப் பணிகொள்ள வல்ல,

ஆர்ந்த புகழச் சுதனை அமரர் பிரானையெம் மானை,

வாய்ந்த வளவயல் சூழ்தண் வளங்குரு கூர்ச்சடகோபன்,

நேர்ந்தவோ ராயிரத் திப்பத் தருவினை நீறு செய்யுமே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain