Error
  • DB function failed with error number 1062
    Duplicate entry '1642663812' for key 'time' SQL=INSERT INTO jos_vvcounter_logs (time, visits, guests, members, bots) VALUES ( 1642663812, 155, 152, 0, 3 )

ஆறாந் திருமொழி

(3176)

செய்ய தாமரைக் கண்ண னாயுல கேழு முண்ட அவன்கண்டீர்,

வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்,

செய்ய சூழ்சு டர் ஞான மாய்வெளிப் பட்டி வைபடைத் தான்பின்னும்,

மொய்கொள் சோதியொ டாயி னானொரு மூவ ராகிய மூர்த்தியே.

விளக்க உரை

(3177)

மூவ ராகிய மூர்த்தி யைமுதல் மூவர்க் குமுதல் வன்றன்னை,

சாவ முள்ளன நீக்கு வ ¡னைத் தடங்க டல்கிடந் தான்தன்னைத்,

தேவ தேவனைத் தென்னி லங்கை எரியெ ழச்செற்ற வில்லியை,

பாவ நாசனைப் பங்க யத்தடங் கண்ண னைப்பர வுமினோ.

விளக்க உரை

(3178)

பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை,

குரவை கோத்த குழக னைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,

அரவ மேறி யலைக டலம ரும்து யில்கொண்ட அண்ணலை,

இரவும் நன்பக லும்வி டாதென்றும் ஏத்து தல்மனம் வைம்மினோ.

விளக்க உரை

(3179)

வைம்மின் நும்மனத் தென்று யானுரைக் கின்ற மாயவன்

சீர்மையை எம்ம னோர்க ளுரைப்ப தென்? அது நிற்க நாfடொறும்,

வானவர் தம்மை யாளும் அவனும் நான்முக னும்ச டைமுடி அண்ணலும்,

செம்மை யாலவன் பாத பங்கயம் சிந்தித் தேத்தி திரிவரே.

விளக்க உரை

(3180)

திரியும் கற்றொ டகல்வி சும்பு திணிந்த மண்கிடந் தகடல்,

எரியும் தீயொ டிருசு டர்தெய்வம், மற்றும் மற்றும் முற்றுமாய்,

ரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,

சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள் சுடர்மு டியண்ணல் தோற்றமே.

விளக்க உரை

(3181)

தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,

சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,

நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்

ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.

விளக்க உரை

(3182)

எழுமைக் குமென தாவிக் கின்னமு தத்தி னைஎன தாருயிர்,

கெழுமி யகதிர்ச் சோதி யைமணி வண்ண னைக்குடக் கூத்தனை,

விழுமி யவம ரர்மு நிவர்வி ழுங்கும் கன்னல் கனியினை,

தொழுமின் தூயம னத்த ராயிறை யும்நில் லாதுய ரங்களே.

விளக்க உரை

(3183)

துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அ வை அல்லனாய்,

உயர நின்றதோர் சோதி யாயுல கேழு முண்டுமிழ்ந் தான்தன்னை,

அயர வாங்கு நமன்த மர்க்கரு நஞ்சி னையச்சு தன்தன்னை,

தயர தற்கும கனறன் னையன்றி மற்றி லேன்தஞ்ச மாகவே.

விளக்க உரை

(3184)

தஞ்ச மாகிய தந்தை தாயொடு தானு மாயவை அல்லனாய்,

எஞ்ச லிலம ரர்க்கு லமுதல் மூவர் தம்முள்ளு மாதியை,

அஞ்சி நீருல கத்துள் ளீர்கள் அவனி வனென்று கூழேன்மின்,

நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.

விளக்க உரை

(3185)

கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்க்கரு மாணிக் கமென தாருயிர்

படவ ரவின ணைக்கி டந்த பரஞ்சு டர்ப்பண்டு நூற்றுவர்,

அடவ ரும்படை மங்க ஐவர்க்கட் காகி வெஞ்சமத்து, அன்றுதேர்

கடவி யபெரு மான்க னைகழல் காண்ப தென்றுகொல் கண்களே?

விளக்க உரை

(3186)

கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத் துக்கு நன்றுமெ ளியனாய்,

மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள் செய்யும் வானவ ரீசனை,

பண்கொள் சோலை வழுதி நாடன் குருகைக் கோன்சட கோபன்சொல்,

பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த ராகக் கூடும் பயலுமினே.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain