ஏழாந் திருமொழி

(3187)

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,

பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,

பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,

பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே.


(3188)

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,

தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம் மான்தன்னை

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,

நாளும் பிறப்பிடை தோறு எம்மை யாளுடை நாதரே.


(3189)

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்

போதனை, பொன்னெடுஞ் சக்கரத் தெந்தை பிரான்தன்னை

பாதம் பணியவல் லாரைப் பணியும் அவர்க்கண்டீர்,

ஓதும் பிறப்பி டை தோறெம்மை யாளுடை யார்களே.


(3190)

உடையார்ந்த வாடையன் கண்டிகை யன்உ டை நாணினன்

புடையார்ப்பொன் னூலினன் பொன்முடி யன்மற்றும்பல் கலன்,

நடையா வுடைத்திரு நாரணன் தொண்டர்தொண் டர்க்கண்டீர்,

இடையார் பிறப்பி டைதோறெமக் கெம்பெரு மக்களே.


(3191)

பெருமக்க ளுள்ளவர் தம்பெரு மானை, அமரர்கட்

கருமை யொழிய அன்றாரமு தூட்டிய அப்பனை,

பெருமை பிதற்றவல் லாரைப் பிதற்றும் அவர்க்கண்டீர்,

வருமையு மிம்மையும் நம்மை யளிக்கும் பிராக்களே.


(3192)

அளிக்கும் பரமனை கண்ணனை ஆழிப் பிரான்தன்னை,

துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணனெம் மான்தன்னை,

ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளும் அவர்க்கண்டீர்,

சலிப்பின்றி யாண்டெம்மைச் சன்மசன் மாந்தரங் காப்பரே.


(3193)

சன்மசன் மாந்தரங் காத்தடி யார்களைக் கொண்டுபோய்,

தன்மை பொறுத்தித்தன் தாளிணைக் கீழ்க்கொள்ளும்அப்பனை,

தொன்மை பிதற்றவல் லாறைப் பிதற்றும் அவர்கண்டீர்,

நம்மை பெறுத்தெம்மை நாளுய்யக் கொள்கின்ற நம்பரே.


(3194)

நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை,

உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக்,

கும்பிநரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர்,

எம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே.


(3195)

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,

வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்

கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.


(3196)

அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும்,

படியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு,

அடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக்

கடியார் அடியார் தம்,அடியாரடி யோங்களே.


(3197)

அடியோங்கு நூற்றவர் வீயஅ ன் றைவருக் கருள்செய்த

நெடியோனை, தென்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்,

அடியார்ந்த ஆயிரத் துள்ளிவை பத்தவன் தொண்டர்மேல்

முடிவு,ஆரக் கற்கில் சன்மம்செய் யாமை முடியுமே.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain