nalaeram_logo.jpg
(977)

வண்டுதண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை,

கண்டல்வேலிமங்கை வேந்தன் கலியனொலிமாலை,

கொண்டுதொண்டர்ப்பாடி யாடக் கூடிடில்நீள்விசும்பில்,

அண்டமல்லால்மற்ற வர்க்கு ஓராட்சியறியோமே.

பதவுரை

வண்டு

-

வண்டுகளானவை

தண்  தேன் உண்டு வாழும் வதரி

-

குளிர்ந்த தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியில் எழுந்தருளியிருக்கிற

நெடு மாலை

-

ஸர்வேச்ரன் விஷயமாக,

கண்டல் வேலி மங்கை வேந்தன் கலியன்

-

தாழைகளை வேலியாகக் கொண்ட திருமங்கைக்குத் தலைவரான ஆழ்வார்

ஒலி

-

அருளிச்செய்த

மாலை கொண்டு

-

இந்தச் சொல் மாலையைக் கொண்டு

தொண்டர்

-

பக்திமான்கள்

பாடி ஆட கூடிடில்

-

பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் அநுபவிக்கப் பெற்றால்

அவர்க்கு

-

அப்படிப்பட்ட மஹான்களுக்கு

நீள் விசும்பில் அண்டம் அல்லால்

-

பரமகாசத்திலேயுள்ள பரம பதத்தைத் தவிர

மற்று ஓர் ஆட்சி அறியோம்

-

வேறொரு லோகமாளப் பெறுதல் இல்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

வண்டு தண்டேனுண்டுவாழும் வதரிநெடுமாலை*

கண்டல்வேலிமங்கைவேந்தன் கலியனொலிமாலை*

கொண்டுதொண்டர்பாடியாடக் கூடிடில் நீள்விசும்பில்*

அண்டமல்லால்மற்றவர்க்கோ ராட்சியறியோமே.

*** -(வண்டுதண்டேன்.) இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரம் இது. வண்டுகள் தேனைப் பருகிக் களித்து வாழுமிடமான ஸ்ரீபதரியிலே எழுந்தருளியிருக்கின்ற ஸர்வேச்வரன் விஷயமாகத் திருமங்கையாழ்வார் அருளிச் செய்த இந்த ஸ்ரீஸூக்திகளாலே அப்பெருமானைப் பாடி, பாட்டுக்குத் தகுதியாக ஆடி அநுபவிக்கப்பெற்றால் அவர்கள் ஸாக்ஷாத் பரம பதத்தை ஆளப் பெறுவர்களேயன்றி அல்பங்களாயும் அஸ்திரங்களாயுமுள்ள உலகங்களிற் சென்று துவளமாட்டார்களென்றதாயிற்று.

ஒவ்வொரு பாட்டிலும் வதரிவணங்குதுமே என்று தலத்தைப்பற்றிச் சொல்லிவந்தவர் இப்பாட்டில் வதரிநெடுமாலை என்று தலைக்கட்டுகையாலே வதரிநாராயணனை உத்தேசித்தே வதரி வணங்கினாரென்னுமிடம் வ்யக்தமாகிறது.

இத்திருமொழியில் ஒவ்வொரு பாட்டிலும் இளையாமுன், ஏசாமுன், நடுங்கா முன், தள்ளி நடவாமுன், பேசி அயராமுன், சிரியாதமுன்னம் என்று அருளிச் செய்து வந்தாரே; இப்படிப்பட்ட அசக்திகாலம் உங்களுக்கு நேருவதற்கு முன்னே வதரியைப்போய் வணங்குங்கள் ' என்று பிறர்க்கு உபதேசித்தாரா? அன்றி, அசக்திவருவதற்கு முன்னே ஆழ்வார் தாம் வதரியை வணங்கப் பாரித்தாரா? என்று கேள்விகேட்பர் சிலர். வணங்குதும் என்று தன்மையாகச்சொல்லியிருக்கிறாரேயன்றி "வணங்குமினே” என்று முன்னிலையாகச் சொல்லவில்லை; ஆகையாலே பிறர்க்கு உபதேசிக்கிறாரென்னப் போகாது; தாம் பாரிக்கிறார் என்றே சொல்லவேண்டும். ஆனாலும், "பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுதமுண்டவாறும் வாழ்ந்தவாறும்", ஒக்கவுரைத்திருமி ”பப்பவப்பர் மூத்த வாறு பாழ்ப்பது சீத்திரளை யொப்ப, ஐக்கள் போதவுந்த உன்தமர் காண்மினென்று, செப்பு நேர்மென் கொங்கை நல்லார் தாம் சிரியாத முன்னம்", ”ஈசி போமினீங்கிரேன்மின்” இத்யாதி பாசுரங்களின் போக்கை நோக்குமிடத்து ஆழ்வார் இங்கனே தம்மைப்பற்றிச் சொல்லிக் கொள்ளமாட்டாரென்று தோன்றுகிறது. விஷயாந்தரங்களைக் காரியுமிழ்ந்து மறந்தொழிந்த இவர் மறு படியும் தமக்கு அப்படிப்பட்ட ஸம்பவங்கள் நேரிடுமென்று நினைப்பது கூடாது. ஆகையாலே இத்திருமொழி பரோபதேசமும் ஸ்வாநுபவமும் கலந்த அருளிச் செயல் என்றே நிச்சயிக்க வேண்டும். "தில்லைத் திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்களே ” என்றும் : திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே” என்றும் பரோபதேசமாய் முன்னிலையாகச் சொல்லுமிடங்களில் ஸ்வாநுபவத்திற்கும் குறை யில்லா தாப் போலே வணங்குதும் என்று ஸ்வாநுபவமாய்த் தன்மையாகச் சொன்ன இவ்விடத்திலும் ஸ்வாநுபவத்தோடு கூடவே பரோபதேசமும் நிகழ்கின்றதென்று கொள்ளக்கடவது. பிறரை நோக்கிச் சொல்ல வேண்டிய வார்த்தைகளையும் தன்மையாகவே சொல்லிவிடுவதும் ஒரு வழக்கமுண்டு. ........ (ய.)

அடிவரவு:-முற்ற முதுகு உறிகள் பீளை பண்டு எய்த்த பப்ப ஈசி புலன்கள் வண்டு ஏனம்.

மூன்றாந் திருமொழி உரை முற்றிற்று.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

ஜீயர் திருவடிகளே சரணம்.

English Translation

Bees drink cool nectar in Vadari, abode of our Lord Nedumal. Devotees sing and dance to this decad of song-garland by screw-pine-fenced-fields-Mangai’s king Kaliyan. If you do, you will doubtless go to rule the wide sky, nowhere else, we know this for sure.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain