nalaeram_logo.jpg
(972)

பண்டுகாமரான வாறும் பாவையர்வாயமுதம்

உண்டவாறும், வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,

தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,

வண்டுபாடும்தண்டு ழாயான் வதரிவணங்குதுமே.

பதவுரை

பண்டு

-

இளம்பிராயத்தில்

காமர் ஆன ஆறும்

-

மாதர்கள் விரும்புதற்குத்தாம் உரியராக இருந்தபடியையும்

பாவையர்வாய் அமுதம் உண்ட ஆறும்

-

அம்மாதர்களுடைய வாயமுதத்தைப் பருகினபடியையும்

வாழ்ந்த ஆறும்

-

சிற்றின்பங்களில் அழிந்தபடியையும்

ஒக்க உரைத்து இருமி

-

சொல்லுவது இருமுவது, மறுபடியும் சொல்லுவது இருமுவது ஆக இப்படியாகி

தண்ட காலா

-

தடியைக் காலாகக்கொண்டு

ஊன்றி ஊன்றி

-

(அசக்தியினால் ஓரிடத்திலேயே) பலதடவை ஊன்றி

தள்ளி

-

தடுமாறி

நடவாமுன்

-

நடக்க நேருவதற்கு முன்னே

வண்டு பாடும் தண் துழாயான்

-

(மதுவுக்காக வந்து) வண்டுகள் பாடுகிற திருத்துழாய் மாலையை யுடையனான எம்பெருமானது

வதரி

-

ஸ்ரீபதரியை

வணங்குதும்

-

வணங்குவோம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

பண்டுகாம ரானவாறும் பாவையர் வாயமுதம்

உண்டவாறும் * வாழ்ந்தவாறும் ஒக்க வுரைத்திருமி*

தண்டுகாலா வூன்றியூன்றித் தள்ளி நடவாமுன்*

வண்போடும் தண்ழோயான் வதரி வணங்குதுமே.

***-(பண்டு காமர்.) ஸம்ஸாரிகளுடைய காலக்ஷேபக்ரமத்தைப் பேசுகிறார். உடலில் வலிவு இருந்தகாலத்தில் ஒரு நல்ல காரியம் பண்ணியறியார்கள் ; விஷய போகங்கள் செய்வதற்கு எவ்வளவு நிஷித்த காரியங்கள் செய்ய வேணுமோ அவ்வளவும் செய்து தீருவர்கள்; இப்படியாக யௌவனபருவத் தைக் கழித்துவிட்டுக் கிழத்தனத்தில் வந்தவாறே அப்போதாவது இழந்த நாளைக்கு அநுதாபப்பட்டு ஏதாவது நன்மை தேடிக்கொள்ள விரும்புவார்களோ; அது கிடையாது; பின்னை என் செய்வார்களென்னில்; தங்கள் உடம்பு கட்டுக் குலைந்தபடியையும் ரூபலாவண்யங்கள் மங்கிப்போன படியையும் விஷய போகங்கள் செய்யமுடியாதபடியையும் நினைந்து நினைந்து வருந்தி 'ஐயோ! இளமையில் அப்படியிருந்தேனே; என்னைக் கண்டு காமுறாதவர்களே கிடையாதே ; எத்தனையோ மாதர்களை அனுபவித்தேனே; எப்படியோ வாழ்ந்தேனே'; இப்போது ஒன்றுக்குமுதவாத காஷ்ட்ட லோஷ்ட்டத்துக்குங் கடைகெட்டவனாய் விட்டேனே!” என்று கதறியழுவதும் நடுநடுவே லொக்கு லொக்கென்று இருமுவ தும் செய்வர்கள். அப்போதாவது ஆசையற்று வாளா கிடப்பர்களோ? கிடவார்கள்; தண்டு காலா ஊன்றியூன்றித் தள்ளிநடந்து செல்லப் பார்ப்பர் கள்; (எங்கே? - பாவையர் வாயமுதமுண்ட விடத்திற்கு.)

அப்படிப்பட்ட நிலைமை நேருவதற்கு முன்னே, தோளினை மேலும் நன் மார்வின் மேலுஞ் சுடர்முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழா யுடையம்மானெழுந்தருளியிருக்கிற வதரியை வணங்குதல் நன்று.

பாவையர்வாயமுதம் என்றதும், வாழ்ந்தவாறும் என்றதும் ஸம்ஸாரிகளுடைய சொலவை அநுவதித்தபடி. பிளிச்சைக்கண்ணிகளைப் பாவைய ரென்பதும், அவர்களது ஊத்தைவாயில் நீரை அமுத மென்பதும், அவர்களோடு கலந்து கெட்டுப்போனதை வாழ்ச்சியென்பதும் ஸம்ஸாரிகளுடைய சொல்லேயன்றி ஆழ்வாருடைய நெஞ்சிலும் அப்படி யில்லையிறே. பாவையர் = பதுமைபோல் அழகியவர்கள் என்றபடி.

ஒக்கவுரைத்திருமி = உரைப்பதும் இருமுவதும் ஒரே காலத்திலாம். நாலு புதங்களைச் சேர்த்துச் சொல்ல சக்தியற்று எப்போதும் இருமிக்கிடக்குங் காலத்திலே வாயாற் சொல்லமுடியுந்தனையும் சில பகவந்நாமங்களைச் சொல்லிப் போதுபோக்கலாமாயிருக்க அப்போதும் பழைய கெட்டகாரியங்களையே அநுவாதஞ் செய்துகொண்டு பாழாய்ப் போவர்கள் ஸம்ஸாரிகள். ... (௫))

English Translation

Recalling with nostalgia your bright days, your love life, and romances through coughs and moans, dragging your weight slowly with a staff in hand; ‘ere that happens, the Lord wears a cool Tulasi wreath humming with bees, -- Worship Him in Vadari.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain