nalaeram_logo.jpg
(971)

பீளைசோரக்கண்ணி டுங்கிப் பித்தெழமூத்திருமி,

தாள்கள் நோவத்தம்மில் முட்டித் தள்ளிநடவாமுன்,

காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்றுநின்றான்,

வாளைபாயும்தண்ட டஞ்சூழ் வதரிவணங்குதுமே.

பதவுரை

கண் இடுங்கி பீளை சோர

-

கண்கள் பசையற்றுப் பிளிச்சை பெருகவும்

பித்து எழ

-

பித்தம் மேலிடும்படியாகவும்

மூத்து

-

கிழத்தனமடைந்து

இருமி

-

(க்ஷயரோகத்தாலே) இருமிக் கொண்டு

தாள்கள் தம்மில் முட்டி நோவ

-

கால்கள் ஒன்றோடொனறு தாக்கி நோகும்படியாக

தள்ளி நடவாமுன்

-

தடுமாறி நடப்பதற்கு முன்னே-,

அன்று

-

முன்னொரு காலத்தில்

காளை ஆகி

-

இளம்பிள்ளையா யிருந்துகொண்டு

கன்று மேய்த்து

-

கன்றுகளை மேய்த்து

குன்று எடுத்து நின்றான்

-

(அவற்றுக்கு நேர்ந்த மழைத் தீங்கை யொழிப்பதற்குக்) கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்ற எம்பெருமானது

வாளை பாயும் தண்தடம் சூழ்ந்த

-

வாளை மீன்கள் குதித்துப் பாய்கின்ற குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த

வதரி

-

ஸ்ரீபதரியை

வணங்குதும்

-

வணங்குவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

பீளைசோரக் கண்ணிடுங்கிப் பித்தெழ மூத்திருமி*

தாள்கள் நோவத் தம்மில் முட்டித் தள்ளி நடவாமுன்*

காளையாகிக் கன்றுமேய்த்துக் குன்றெடுத் தன்றுநின்றான்*

வாளைபாயும் தண்தடம் சூழ் வதரி வணங்குதுமே.

* * * -(பீளைசோர.) கிழத்தனத்தில் கண்கள் சுருங்கிப்போய் அவற்றில் நின்று பிளிச்சை பெருகவும், பித்தம் மேலிட்டுத் தலைசுற்றித் தள்ளம்பாறி நடக்கவும் நேர்தல் இயல்வு. அப்படி நேர்ந்தகாலத்து வதரி வணங்குதல் முடி யாத காரியமா தலால் அப்படி நேருவதற்கு முன்னமே அதனை வணங்குதல் நன்று . .

பீளை - கண்ணழுக்கு. இடுங்குதல் - சுருங்குதல். பித்து - பித்தம்' என்ற வடசொற்சிதைவு. தாள்கள் தம்மில் முட்டுதலாவது = இரண்டுகால்களும் அடைவே நடக்கமாட்டாமையாலே ஒரு முழந்தாளை மற்றொரு முழந்தாள் தாக்குதல்.

காளை= "காளையே எருது பாலைக்க திபன் நல்லிளையோன் பேராம்” என்பது நிகண்டு. காளையாகிக் கன்று மேய்த்தது கிருஷ்ணாவதாரத்தில். குன்றெடுத்துநின்ற வரலாறு:- திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்களெல்லா ரும் கண்ணபிரானுடைய அற்புத சரிதைகளைக்கண்டு . இவனே நம் குலக் கொழுந்து, இவன் சொற்படி நடப்பதே நமது கடமை'' என்று தீர்மானித் திருந்தார்கள். இருக்கையில் சரத்காலம் வந்தது; அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் இந்திரனுக்குப் பூசை செய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப் பொருள் களையும் அமைப்பதைக்கண்டு கண்ணபிரான் 'ஓ பெரியோர்களே! இவை எதுக்காக' என்றான்; அதற்கு அவர்கள் "அப்பா! தேவேந்திரனுடைய அநுக்ர ஹத்தினால் காலங்களில் தகுதியாக மழைபெய்து அதனால் பசுக்களும் நாமும் ஸுகமே வாழ்கின்றோம்; இனி எப்போதும் அந்த இந்திரன் நம்மை இப்படியே ரக்ஷிக்கவேணு மென்கைக்காக அவனுக்கு வருஷத்துக்கு ஒரு முறை பொங்க லிடுவதுண்டு; அதற்காக இவையெல்லாம் சேர்த்து வைத்தோம்" என்றனர். கண்ணன் அதுகேட்டு நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கின்றோமோ அதற்கன்றோ பூஜை செய்ய வேன்டும் ; இக் கோவர்த்தன மலையன்றோ பசுக்களுக்குப் புல்லும் தண்ணீரும் கொடுத்துக் காப்பாற்றுகின்றது; இந்திரனால் நமக்கு என்ன பிரயோஜனமுண்டு? இதையெல்லாம் நீங்கள் இந்த மலைக்கே பலியிடுங்கள்' என்ன, இடையர்கள் அப்படியே செய்யத் துணிந்து மலைக்கே பலியிட்டவளவில், கண்ணபிரான் தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றை யெல்லாம் தானே அமுது செய்திட்டான். பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்றுத் தன் பரிஜனங்களான மேகங்களையழைத்து (இடைக்குலத்துக்குப் பெருந்தீங்கு விளையும்படி விடாமழை பெய்யுங்கள்' என்று சொல்லிக் கட்டளையிடவே அம்மேகங்கள் அப்படியே வந்து ஏழுநாள் விடாமழை பெய்ய, இடையரும் பசுக்களுமெல்லாம் கதறிக்கதறிக் கண்ணனையே சரணமடைய, கண்ணபிரான் அபயமளித்து அந்த மலையைப் பிடுங்கிக் குடையாகத் தூக்கித் தாங்கி, கோகுலத்தைச் சேர்ந்த ஸகல பிராணிகளையும் அதன் கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளினன். ஏழுநாள் இடை விடாது கல்மாரி பெய்தும் யாருக்கும் எவ்விதமான பாதையும் நேரிடாமையைக் கண்ட இந்திரன் பராத்பரனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய மஹிமைக்கு வியந்து கீழ்" இறங்கி வந்து பணிந்து அபராதக்ஷாமணம் பண்ணிக்கொண்டு போய்ச் சேர்ந்தான். ..... .... ..... ..... ..... ..... ... (5)

English Translation

Eyes sunken and running, biliousness, coughing hard, legs knocking against each other, dragging the feet painfully; ‘ere this happens, -- the lad who grazed calves, and stood holding amount against rain, is here amid lakes jumping with Valai-fish, -- Worship Him in Vadari.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain