nalaeram_logo.jpg
(968)

முற்றமூத்துக்கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,

இற்றகால்போல்தள்ளி மெள்ள இருந்தங்கிளையாமுன்,

பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு, உயிரை

வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே.

பதவுரை

முற்ற மூத்து

-

பூர்த்தியாகக் கிழத்தனமடைந்து

கோல் துணை ஆ

-

ஊன்றுகோலை ஸஹாயமாகக் கொண்டு கூன் முதுகிட்டு

முன் அடி நோக்கி வளைந்து

-

முன்காலைக் கவிழ்ந்து நோக்குமாபோலே

இற்ற கால்போல் தள்ளி

-

முறிந்த கால்போலே தடுமாறி

மெள்ள இருந்து

-

மஹாப்ரயாஸத்தோடே உட்கார்ந்து

இளையா முன்

-

இவ்விதமாகக் கஷ்டங்களையடைவதற்கு முன்னே,

பெற்ற தாய்போல் வந்த

-

பெற்ற தாயான யசோதையின் வடிவுகொண்டு (தன்னைக் கொல்ல) வந்த

பேய்ச்சி

-

பூதனையினுடைய

பெரு முலை ஊடு

-

பெரிய முலையின் வழியாக

உயிரை

-

அவளது உயிரை

வற்ற வாங்கி உண்டவாயன்

-

நிச்சேஷமாக உறிஞ்சி உண்ட திருப்பவளத்தை யுடையனான எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற

வதரி

-

ஸ்ரீபதரியை

வணங்குதும்

-

வணங்குவோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

ஆழ்வார் திருவடிகளே சரணம். - மூன்றாந் திருமொழி - முற்றமூத்து..

திருப்பிரிதியை அநுபவித்த பிறகு திருவதரியை அநுபவிக்க இழிகிறார். பதரீ என்ற வட சொல் வதரியெனத் திரிந்துகிடக்கிறது. வடமொழியில் இலந்தைமரங்களுக்கு பதரீ என்று பெயர். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் ஸ்தாந மென்பதுபற்றி பதரிகாச்ரமம் என்று ப்ரஸித்தமாக வழங்கப்படுகிற க்ஷேத்ரத்தை இத்திருமொழியிலும் அடுத்த திருமொழியிலும் அனுபவிக்கிறார். வதரியென்பது வேறு, வதரியாச்சிரமம் என்பது வேறு - என்று சிலர் நினைத்திருப்பதுண்டு; உண்மையில் இரண்டும் ஒன்றே. " தென்னரங்கமே தென்னரங்கமே” என்று ஒருபதிகமருளிச்செய்து ''அரங்மாநகரமர்ந் தானே” என்றும் "அணி பொழில் திருவரங்கத்தம்மானே” என்றும் வேறு பதிகங்களருளிச்செய்தவளவால் திவ்யதேசம் மாறுபட்டு விடாதிறே. அது போல் இங்குங்கொள்க. "வதரி வணங்குதுமே, வதரி வணங்குதுமே” என்ற இத்திருமொழியால் பதரிகாச்ரம க்ஷேத்ரத்தை மங்களாசாஸநம் பண்ணுகிறாரென்றும், "வதரியாச்சிரமத்துள்ளானே" என்ற அடுத்த திருமொழியால் அந்த க்ஷேத்திரத்தி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானைத் துதிக்கின்றாரென்றும் உணர்க.

அடுத்த திருமொழியாகிய எனமுனாகி என்ற திருமொழியின் வியாக்கி யான அவதாரிகைத் தொடக்கத்தில் ''ஸ்ரீபதரியென்றும் பதரிகாச்ரமமென்றும் இரண்டு திருப்பதியாய்” என்று பெரியவாச்சான் பிள்ளை ஸ்பஷ்டமாக அருளிச் செய்திருக்கிறாரே, அதற்குக் கதி என்? என்று கேட்கக்கூடும். கேண்மின்;-- ஸ்ரீபதரீநாதன் எழுந்தருளியிருக்கிற திருமலை முழுவதையும் திருவுள்ளம்பற்றி வதரிவணங்குதுமே என்றும், அந்தத் திருமலையில் ஏகதேசமாயும் ஸ்ரீநாராயண மூர்த்தி தவம்புரிந்த இடமாயும் தானே சிஷ்யனுமாய் ஆசார்யனுமாய் நின்று திருமந்திரத்தை வெளியிட்டருளின இடமாயுமிருக்கிற ஸ்ரீபதரிகாச்ரம ஸ்தாக விசேஷத்தைத் திருவுள்ளம்பற்றி வதரியாச்சிராமத்துள்ளானே என்றும் அரு ளிச் செய்கிறார் ஆழ்வார் - என்னுமிவ்வளவையே பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி காட்டுமத்தனை யொழிய வேறில்லை. திவ்யதேசக்கணக்கில் இவ்விரண்டை யும் வெவ்வேறாகக்கொண்டு கணக்கிட்டால் நூற்றெட்டுத் திருப்பதி யென்பது போய் நூற்றொன்பது திருப்தியென்ன வேண்டிற்றாம். பிள்ளைப்பெருமாளையங் கார் பாடிய நூற்றெட்டுத் திருப்பதியந் தாதியில் வடநாடு பன்னிரண்டனுள் வதரி என்று தனியே ஒரு திருப்பதி கூறப்படுவதில்லை ; “தாட்கடிமை யென்று தமையுணரார்க் கெட்டெழுத்தும், கேட்க வெளியிட்டருளுங் கேசவனை- வேட் கையொடு, போவ தரிதானாலும் போய்த்தொழுவேர் நெஞ்சமே, மாவதரியாச்சிரமத்து.” என்று ஸ்ரீபதரிகாச்ரமமொன்றே பாடப்பட்டுள்ளது. ஆகையாலே, திருப்பதிக்கணக்கில் இரண்டும் ஒன்றே என்றும், ஆழ்வாரது திருவுள்ள நோக்கத்தால் ஸ்தாகபேதமுண்டென்றும் கொள்ள வேணும். நிற்க.

வதரி யென்னுமித்திருப்பதி மற்ற * கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை யென்னுந் திருப்பதிகள் போலல்லாமல் வெகு பரிச்ரமப்பட்டு அடையக்கூடிய தலமாதலால் சரீரம் கட்டுக்குலைவதற்கு முன்னே போய் அநுபவிக்கவேண்டு மத்தனை யன்றி உடல் தளர்ந்துபோனபின் நெஞ்சால் நினைக்கவும் அரிதாமா தலால் அப்படிப்பட்ட தளர்ச்சி நேருவதற்கு முன்னே (அதாவது-உடல் பாங்காக இருக்குங் காலத்திலேயே) சென்று ஸேவிக்கக் கடவதென்று அருளிச்செய்கிறார் இதில். ... ... ... ... *

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

முற்றமுத்துக் கோல்துணையா முன்னடிநோக்கி வளைந்து *

இற்றகால்போல் தள்ளிமெள்ள விருந்தங் கிளையாமுன் *

பெற்ற தாய்போல் வந்தபேய்ச்சி பெருமுலையூடு * உயிரை

வற்றவாங்கி யுண்டவாயான் வதரி வணங்குதுமே.

*** : (முற்றமுத்து.) சரீரத்துக்கு எவ்வளவு கிழத்தனம் வரக்கூடுமோ அவ்வள வும் வந்து, நடந்து செல்லமாட்டாமல் ஒரு கோலைக் கையிலே அவலம்ப மாகப் பிடித்துக்கொண்டு முதுகு கூனிட்டுப் போகவே முன்னடியை நோக்கி வளைந்து, முறிந்துபோன காலைக்கொண்டு நடக்கமுடியாதது போல ஓரடி யும் எடுத்து வைக்கமாட்டாமல் தடுமாறி, தடி பிடித்துக்கொண்டும் நடக்க மாட்டாமல் திடீரென்று தரையிலே விழுந்திருந்துகொண்டு பெருமூச்சு விட்டு இப்படியாக ச்ரமப்படுகிற காலம் வந்துவிட்டால் பதரிகாச்ர மயாத்ரையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதே; ஆகையால் அப்படிப்பட்ட கெட்ட நிலைமை வருவதற்கு முன்னே ஸ்ரீபதரியைச் சென்று வணங்குவோம் வாருங்க ளென்று அன்பர்களை அழைக்கிறார் போலும்.

பேய்ச்சிபெருமுலையூடுயிரை வற்றவாங்கியுண்ட வரலாறு:- ஸ்ரீக்ருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ண்பிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அசுரர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணசிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்பு களின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

கோல்துணையா என்றவிடத்து வியாக்யானத்தில் ஓர் ஐதிஹ்யம் அருளிச் செய்வர்;- நஞ்சீயர் ஸந்த்யாஸாச்ரமஸ்வீகாரம் செய்துகொள்ளும்போது த்ரிதண்டம் தரித்துக்கொள்வதற்கான மந்திரம் “

” (ஸகா மா கோபாய) (இதன் பொருளாவது - ஓ த்ரிதண்டமே! நீ எனக்குத் துணையாயிருந்து என்னை ரக்ஷிக்கவேணும் என்பதாம்.) என்னக் கேட்டு, ஸர்வஜ்ஞனாயும் ஸர்வசக்தனாயும் பரமசேதநனாயுமிருக்கிற எம்பெருமானையே துணையாகப் பற்ற வேண்டியிருக்க அசேததமான தண்டத்தை நோக்கி இங்கனே சொல்லும்படி யாக ஒரு ஆச்ரமம் நேருவதே! என்று ஸாதித்தாராம். சாஸ்த்ர விதிப்படி கோலைத் துணை கொள்ள வேண்டியது அங்கு ; கிழத்தனத்தில் கோலைத் துணை கொள்வது அசக்தியினாலே. அப்படிப்பட்ட அசக்தி வருவதற்கு முன்னே வதரி வணங்குதும்.

இவ்விடத்தில் இன்னு மோர் ஐதிஹ்யமும் சொல்லுவதுண்டு; நஞ்சீயர் பட்டர் திருவடிகளுக்கு அந்தரங்கராய் வர்த்திக்கிறநாளிலே ஒரு கைசிகத்வாதசி யன்று பட்டர் ப்ரஹ்மரதத்திலெழுந்தருளித் திருவீதி யலங்கரிக்கப் புறப்பட்ட வாறே நஞ்சீயரும் ஸ்ரீபாதம் தாங்கப் புக, "உத்தமாச்ரமியாய் த்ரிதண்டதாரி யான உமக்கு இக்காரியம் தகாது" என்று பட்டர் முதலானார் மறுத்துக்கூற, நஞ்சீயர்" எனக்கு நீ துணையாகி என்னை ரக்ஷிக்கவேணும்” என்கிற மந்திரத்தைச் சொல்லி ஸ்வீகரிக்கப்பட்ட இந்த முக்கோல்தானே இன்று எனக்கு விரோதியாகிறதோ? இக்கோல் எனக்குத் துணையல்லவோ? ஸ்வரூபரக்ஷணத் துக்கு இக்கோல் இடையூறாயின் இஃது எனக்கு வேண்டா ” என்று சொல்லி த்ரிதண்டத்தை விட்டெறியப் போனாராம். அப்போது அவருடைய பக்தி விசேஷத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். இவ் வைதிஹ்யங்கள் கோல் துணையா என்ற ப்ரஸங்கத்திலே நினைவுக்கு வரக்கூடியன.

கிழத்தனத்தில் முதுகு கூனிட்டபின் முன்னடி நோக்கி வளை தல் இயல்பு. ... ... ... ... ... ... ... (க)

English Translation

Ripe with age, bending to see the next step, faltering slowly, feeling the way, ‘ere you tire away to this state, -- the ogress came disguised as a mother; our Krishna took the milk from the big breast, and took her life as well with his mouth, and dried her to the bones, -- Worship Him in Vadari.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain