(918)

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக் கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம் ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்

கனுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே.

 

பதவுரை

குண திசை மாருதம்

-

கீழ்காற்றானது

கொழு கொடி

-

செழுமை தங்கிய கொடியை யுடைத்தான

முல்லையின்

-

முல்லைச் செடியிலுண்டான

கொழு மலர்

-

அழகிய மலர்களை

அணலி

-

அளைந்து கொண்டு

இதுவோ

-

இதோ

கூர்ந்தது

-

வீசாநின்றது;

மலர் அணை

-

புஷ்பசயநத்திலே

பள்ளிகொள்

-

உறங்குகின்ற

அன்னம்

-

ஹம்ஸங்களானவை

ஈன் பணி நனைந்த

-

(மழை போல்) சொரிகிற பனியாலே நனைந்த

தம்

-

தங்களுடைய

இரு சிறகு

-

அழகிய இறகுகளை

உதறி

-

உதறிக் கொண்டு

எழுந்தன

-

உறக்கம் விட்டெழுந்தன;

விழுங்கிய

-

(தன் காலை) விழுங்கின

முதலையின்

-

முதலையினுடைய

பிலம்புரை

-

பாழிபோன்ற

பேழ் வாய்

-

பெரியவாயிலுள்ள

வெள் எயிறு உற

-

வெளுத்த கோரப்பற்கள் ஊன்ற

அதன்

-

அம்முதலையினுடைய

விடத்தினுக்கு

-

பல விஷத்திற்கு

அனுங்கி அழுங்கிய

-

மிகவும் நோவுபட்ட

ஆனையின்

-

கஜேந்திராழ்வரனுடைய

அரு துயர்

-

பெரிய துக்கத்தை

கெடுத்த

-

போக்கியருளின

அரங்கத்தம்மா

-

பள்ளி எழுந்தருளாய்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸூர்யனுக்கே நேரே உறவான தாமரைப் பூவினுடைய விகாஸமேயன்றியே நிலப்பூவான முல்லைப்பூவும் விகஸித்து, கீழ்காற்றானது அதன் மணத்தைக் கொண்டு தேவரீரைத் திருப்பள்ளியுணர்த்துமாபோலே வந்து வீசாநின்றது இக்காற்று வீசினவாறே, புஷ்பசயனத்திலே கிடந்துறங்கின ஹம்ஸமிதுநங்களும்,  ‘பொழுது விடிந்தது’ என்றறிந்து, இரவெல்லாம் தமது இறகுகளிற் படிந்திருந்த பனித்திவலைகளை உதறிக்கொண்டு உறக்கம் விட்டெழுந்தன. கஜேந்திராழ்வானை அன்று கொடிய ஆபத்தில் நின்றும் விடுத்துக் காத்தருளினாற்போலே இன்று அடியோங்களைக் காத்தருள்வதற்காக தேவரீர் திருப்பள்ளி விட்டெழுந்தருள வேணுமென்கிறது.

[விழுங்கிய இத்யாதி.] முதலையானது யானையின் காலைச் சிறிது கவ்வின மாத்திரமே யல்லது விழுங்கவில்லையே. அப்படியிருக்க “விழுங்கிய முதலையின்” என்னலாமோ? எனின்; பசல்கள் கிணற்றினருகே போயிற்றென்றால் “ஐயோ! குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டது! விழுந்துவிட்டது! என்பது போல் இதனைக் கொள்க.

கூர்ந்தது= கூர்தல்...மிகுதல், அதிகமாதல். மாருதம் - வடசொல் பள்ளி கொண்டன்னம்” என்ற சிலர் பாடத்தில், பள்ளிகொண்ட + அன்னம் எனப் பிரித்து, தொகுத்தல் விகாரமாகக் கொள்க. ஈன் பனி – உண்டானபனி என்னுதல், பெய்கிற பனி என்னுதல். பிலம்-ஸூனாம். புரை – உவமவுருபு. பேழ்-பெருமை.  விடம்-விஷம். அருந்துயர்-மற்றொருவராலும் போக்க அரிதான துயர்.

 

English Translation

The Eastern wind blows softly over blossoms of Mullai wafting their fragrance everywhere. The swan Pair nesting among lotus blossoms have woken up flapping their wings wet with dew. O Lord of Arangam who saved the mighty, elephant Gajendra from the death-like jaws of the crocodile! Pray wake up.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain