nalaeram_logo.jpg
(917)

கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்

மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி

எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி யெழுந்தரு ளாயே.

பதவுரை

அரங்கத்து அம்மா

-

திருவரங்கத்தில் பள்ளி கொண்டருளும் ஸ்வாமியே!

கதிரவன்

-

ஸூர்யனானவன்

குணதிசை

-

கிழக்குத் திக்கிலே

சிகரம்

-

உதயகிரியின்) கொடு முடியிலே

வந்து அணைந்தான்

-

வந்துகூடினான்;

கன இருள்

-

(இரவில்) அடர்ந்திருந்த இருளானது

அகன்றது

-

நீங்கி யொழிந்தது;

அம்

-

அழகிய

காலைப் பொழுது ஆய்

-

காலைப் பொழுது வர,

மா மலர் எல்லாம்

-

சிறந்து புஷ்பங்களெல்லாம்

விரிந்து

-

விகாஸமடைய

மது ஒழுகின

-

தேன் வெள்ளமிடாநின்றன;

வானவர்

-

தேவர்களும்

அரசர்கள்

-

ராஜாக்களும்

வந்து வந்து

-

ஒருவர்க்கொருவர் முற்கோலிவந்து

ஈண்டி

-

திரண்டு

எதிர்திசை

-

திருக்கண்ணோக்கான தெற்குத் திக்கிலே

நிறைந்தனர்

-

நிறைந்துநின்றார்கள்;

இவரொடும் புகுந்த

-

இவர்களோடு கூடவந்த (இவர்களது வாஹநமாகிய)

இரு களிறு ஈட்டமும்

-

பெரிய ஆண்யானைத் திரள்களும்

பிடியொடு

-

பெண்யானைத் திரள்களும்

முரசும்

-

பேரிவாத்யங்களும்

அதிர்தலில்

-

சப்திக்கும்போது

எங்கும்

-

எத்திசையும்

அலை

-

அலையெறியாநின்ற

கடல் போன்று உளது

-

ஸமுத்ர கோஷத்தை ஒத்திருந்தது.

(ஆதலால்)

பள்ளி எழுந்தருளாய்

-

திருப்பள்ளியை விட்டு எழுந்திருக்கவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பொழுது விடிந்தமைக்குள்ள அடையாளங்களையும் திருப்பள்ளி யெழுந்திருக்க வேண்டிய காரணங்களையுங்கூறி உணர்த்துகின்றார்.

மஹாராஜன் பள்ளி கொண்டிராநின்றால் அவனை உணர்த்துகைக்குச் சிற்றஞ்சிறுகாலையில் ஸந்த்யாதீபங்கொண்டு வருவாரைப்போலே ஸூர்யபகவான் தன் கிரணங்கள் எல்லாவற்றோடும் கீழ்த்திசையில் உதயகிரியினுச்சியில் வந்து அணையாநின்றான்; உடனே, செறிந்துகிடந்த இருள் சிதறிப்போயின: இருள் நீங்கினவாறே “சிற்றஞ்சிறுகாலை” என்னும்படியான அழகிய ப்ராஹ்ம முஹூர்த்தம் ஆக, தாமரை முதலிய மலர்களெல்லாம் விகஸித்துக் தேனொழுகா நின்றன; இந்திரன், குபேரன் என்னும்படியான பலதேவர்களும் ராஜாக்களும் தம் தம் பதவிகளில் நின்றும் தங்களுக்கு நழுவுதல் வாராமைக்கத் தேவரீரைத் திருவடித்தொழுகையிலுண்டான விரைவு மிகுதியாலே வந்து திரண்டு “எம்பெருமான் திருப்பள்ளி யுணர்ந்தவாறே நம்மை முதலிலே நோக்கவேணும்” என்னுமாசையாலே திருக்கண்ணோக்கான எதிர்திசையிலே வந்து நின்றார்கள். இவர்களுடனே வந்த பெரிய யானைத் திரள்களும் இனம்பிரியாத பேடைகளும் வாத்ய கோஷங்களும் இந்த ஸமுதாயமாக முழங்குகிற முழக்கமானது சந்த்ரோதயத்தில் கடல்போலே கிளராநின்றது. உபய விபூதி  நாதரான தேவரீர் திருப்பள்ளியுணர்ந்தருளி இவர்களுக்கு முகங்கொடுத்தருளி அடிமை கொண்டருள வேணுமென்பது கருத்து.

குணக்கு + திசை - குணதிசை திசையோடு திசைப்பெயர் சேர உயிர் மெய்யும் ககரவொற்றும் நீங்கிற்று, சிகரம் - பரிவாரம் என்ற வடசொல் திரிபு. கனவிருள்-ஸிந என்ற வடசொல் கனவெனத் திரிந்தது. ஆய் = ஆக என்னும் எச்சத்திரிபு. மது –** என்ற வடசொல் திரிபு “மது விருந் தொழுகின” என்னும் அத்யாபக பாடம் வ்யாக்யாநத்துக்குச் சேராது. களிறு + ஈட்டம் - களிற்றீட்டம் முரசு - ஹ ரஜ என்ற வடசொல் திரிபு.

English Translation

The Sun has risen over the Eastern peak, dispelling darkness, ushering in the morning. Flowers in profusion everywhere have blossomed. Kings and celestials push their way before your sanctum. ‘Their elephants and kettle drums sound like thunder and the rolling sea. Pray wake up, O Lord of Arangam!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain