nalaeram_logo.jpg
(885)

வண்டின முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை

கொண்டல்மீ தணவும் சோலை குயிலினம் கூவும் சோலை

அண்டர்கோ னமரும் சோலை அணிதிரு வரங்க மென்னா

மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை விலக்கிநாய்க் கிடுமி னீரே.

பதவுரை

வண்டு இனம் முரலும் சோலை

-

வண்டுகளின் கூட்டங்களானவை காநம்  செய்யா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்,

மயில் இனம் ஆலும் சோலை

-

மயில்களின் கூட்டங்களானவை கூத்தாடாநிற்கப் பெற்ற சோலைகளையுடையதும்

கொண்டல் மீது அணவும் சோலை

-

மேகங்களானவை மேலேவந்து படியா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்

குயில் இனம் கூவும் சோலை

-

குயில்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அழையா நிற்கப்பெற்ற சோலைகளையுடையதும்,

அண்டர் கோன் அமரும் சோலை

-

தேவர்கட்குத் தலைவனான ஸ்ரீரங்கனாதன் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சோலைகளை

அணி

-

ஆபரணமாகவுடையதுமான

திரு அரங்கம் என்னா

-

ஸ்ரீரங்கம் என்று சொல்லமாட்டாத

மிண்டர்

-

நன்றியறிவில்லாத மூர்க்கர்கள்

பாய்ந்து உண்ணும் சோற்றை

-

மேல் விழுந்து உண்ணுகிற சோற்றை

விலக்கி

-

(அவர்கள் உண்ணக் கூடாதபடி) தடுத்து

நீர் நாய்க்கு இடுமின்

-

நீங்கள் (அந்தச்சோற்றை)  நாய்க்கு இடுங்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவரை பகவத்விசய விரோதிகளான பாவிகளை நினைத்ததற்கும் அவர்களோடு ஸம்பாசனை செய்ததற்கும் ப்ராயஸ்சித்தமாக “வண்டினமுரலுஞ் சோலை”  இத்யாதியைப் பரம போக்யமாகத்  தாம் அநுஸந்திக்கச் செய்தேயும், மீண்டும் “திருவரங்கமென்னாமிண்டர்”என்று அப்பாவிகளையே நினைக்கிறார்.  அவர்களையொழிய இவர்க்கு ஒருக்ஷணமும் செல்லாதுபோலே. ஸம்ஸாரத்திலேயே நெடுநாள் ஊன்றினவன் கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத்தவரோடுண்டான பற்றை அறுத்துக்கொண்டு பகவத்விஷய சிந்தையினாலேயே போதுபோக்குவேணுமென்று பெருமுயற்சி செய்தாலும் பழையதான வாஸநையின் கணத்தினால் அந்த ஸம்ஸாரப்பற்றை விரைவில் அறுத்துக்கொள்ள முடியாமல் “அங்குற்றேனல்லே னிங்குற்றேனல்லேன்” என்றாற்போல இருகரையனாய்த் தடுமாறுமாபோலேபராங்முகரையும் சீர்திருத்தி மங்களாபாஸநத்துக்கு ஆளாக்கிக் கொள்வதற்காகப் பாடுபடுகையாகிற ஒரு விலக்ஷண ஸம்ஸாரத்திலே நெடுநாளாக ஊன்றின இவ்வாழ்வார், மநோரதம் நிறைவேறப்பெறாத வருத்தத்தினால் அப்பாவிகளின் பற்றை அறுத்துக்கொள்ளவேணுமென்று பெருக்கமுயன்றாலும் அது இவர்க்கு விரைவில் கைகூடுகிறதில்லை.  மங்களாபாஸணத்திற்கு ஆள்சேர்க்கப் படுகிறபாட்டின் உறைப்பு என்னே.

திருவரங்கமென்னாமிண்டர்- அவன் தங்களுக்காக வந்து கிடவாநிற்க, அவனுடைய தேசத்தை வாயாலே சொல்லவுங்கூடமாட்டாத மூர்க்கர்.  நரகவாஸம், கர்ப்பவாஸம் முதலானவை பிடரியைப்பிடித்துக்கொண்டு நிற்க, கேவலம் தேகபோஷணத்திலேயே ஊன்றிக் கிடக்கிறவர்களுக்கு மேற்பட்ட மூர்க்கரும் உண்டோ?

(“மிண்டர் பாய்ந்துண்ணுஞ் சோற்றைவிலக்கி நாய்க்கிடுமிளீரே.”)  “நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடைப், பூமிபாரங்களுண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்றார் பெரியாழ்வார்;  இவர் நாய்க்கிடுங்களென்கிறார்.  தங்களை உத்தேசித்து வந்து கண்வளர்ந்தருளுகிற அந்த உபகாரத்தை அறியாத க்ருதக்னர் ஜீவிக்கிற ஜீவனத்தை விலக்கி, ஒருநாள் ஒருபிடி சோறிட்டவன் வாசலைப்பற்றிக் கிடக்குமத்தனை நன்றியறிவுடைய நாய்க்கிடுங்களென்கை.

நாய் நன்றியறிவுடையதென்பது உண்மையே;  அதற்கு சோறிடவேணுமானால் தனக்கு உரிய சோற்றை இடட்டும்;  பிறன் உண்கிற சோற்றைப்பிடுங்கி நாய்க்கு இடுவதற்கு என்ன அதிகாரமுண்டு?  என்று மங்கிக்கவேண்டாயோ அஸாதுப்யோர்த்த மாதாய ஸாதுப்பயஸ் ஸம்ப்ரயச்சதி-கல்பகோடி கைஸ்ராணி ஸ யாதி ச்ரேயஸாம் பதம்” என்று அஸத்துக்களின் பொருளைப்பறித்து ஸத்துக்களுக்கு இடும்படி ப்ரஸ்த்ரம் விதித்திராநின்றதிறே;  இவ்வர்த்தத்தை உண்மையாக அறிந்து அநுஸ்டாநபர்யந்தம் வெளிக்காட்டியவர் திருமங்கையாழ்வாரென்க.

அண்டர்-- இடையர்க்கும் தேவர்க்கும் பெயர்.

English Translation

The beautiful Tiru-Arangam lies amid groves where bumble bees hum songs, - groves where peacocks dance, groves where clouds gather in embrace, and groves where cuckoos coo with love! Remove the food from the gorging ungrateful ones and throw it to the dogs.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain