ஐந்தாந் திருமொழி

(2751)

மின்னும் மணிமுறுவல் செவ்வாய் உமையென்னும்,

அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர், பொன்னுடம்பு வாடப் புலனைந்தும் நொந்தகல,

தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்து,ஆங் கன்ன அருந்தவத்தி னூடுபோய், - ஆயிரந்தோள்

விளக்க உரை

(2752)

மன்னு கரதலங்கள் மட்டித்து, மாதிரங்கள மன்னு குலவரையும் மாருதமும் தாரகையும்,

தன்னி னுடனே சுழலச் சுழன்றாடும், கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி,

அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே? பன்னி யுரைக்குங்கால் பாரதமாம்-பாவியேற்கு

விளக்க உரை

(2753)

என்னுறுநோய் யானுரைப்பக் கேண்மின், இரும்பொழில்சூழ் மன்னு மறையோர் திருநறையூர் மாமலைபோல்,

பொன்னியலும் மாடக் கவாடம் கடந்துபுக்கு, என்னுடைய கண்களிப்ப நோக்கினேன், - நோக்குதலும்   

விளக்க உரை

(2754)

மன்னன் திருமர்பும் வாயும் அடியி ணையும், பன்னு கரதலமும் கண்களும், - பங்கயத்தின்            

விளக்க உரை

(2755)

பொன்னியல் காடோர் மணிவரைமேல் பூத்ததுபோல், மின்னி ஒளிபடைப்ப வீழ்நாணும் தோள்வ ளையும்,

மன்னிய குண்டலமும் ஆரமும் நீண்முடியும், துன்னு வெயில்விரித்த சூளா மணியிமைப்ப,

மன்னும் மரகதக் குன்றின் மருங்கே, - ஓர் இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான்,            

விளக்க உரை

(2756)

அன்னமாய் மானாய் அணிமயிலாய் ஆங்கிடையே, மின்னாய் இளவேய் இரண்டாய் இணைச்செப்பாய்,

முன்னாய தொண்டையாய்க் கொண்டை குலமிரண்டாய், அன்ன திருவுருவம் நின்ற தறியாதே,

என்னுடைய நெஞ்சும் அறிவும் இனவளையும், பொன்னியலும் மேகலையும் ஆங்கொழியப் போந்தேற்கு

மன்னும் மறிகடலும் ஆர்க்கும், - மதியுகுத்த             

விளக்க உரை

(2757)

இன்னிலா விங்கதிரும் என்றனக்கே வெய்தாகும்.

தன்னுடைய தன்மை தவிரத்தான் எங்கொலோ, தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,

மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும், இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,

முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து, பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,

என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன் கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,

கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து, தன்னுடைய தோள்கழிய வாங்கி, - தமியேன்மேல்     

விளக்க உரை

(2758)

என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான், பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,பேதையேன்              

விளக்க உரை

(2759)

கன்னவிலும் காட்டகத்தோர் வல்லிக் கடிமலரின், நன்னறு வசமற் றாரானும் எய்தாமே,

மன்னும் வறு நிலத்து வாளாங் குகுத்ததுபோல், என்னுடைய பெண்மையும் என்நலனும் என்முலையும்,

மன்னு மலர்மங்கை மைந்தன், கணபுரத்துப்               

விளக்க உரை

(2760)

பொன்மலைபோல் நின்றவன்றன் பொன்னகலம் தோயாவேல்

என்னிவைதான்? வாளா எனக்கே பொறையாகி, முன்னிருந்து மூக்கின்று,மூவாமைக் காப்பதோர்

மன்னும் மருந்தறிவி ரில்லையே மல்விடையின்

விளக்க உரை

Last Updated (Wednesday, 12 January 2011 07:17)

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain