மூன்றாந் திருமொழி

(2731)

அன்ன அறத்தின் பயனாவது?, ஒண்பொருளும்

அன்ன திறத்ததே ஆதலால், - காமத்தின் மன்னும் வழிமுறையே நிற்றும்நாம்  மானோக்கின்

அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,

விளக்க உரை

(2732)

மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,

தென்னுறையில் கேட்டறிவதுண்டு-அதனை யாம்தெளியோம்

விளக்க உரை

(2733)

மன்னும் வடநெறியே வேண்டினோம்வேண்டாதார்

தென்னன் பொதியில் செழுஞ்சந் தனக்குழம்பின், அன்னதோர் தன்மை அறியாதார், - ஆயன்வேய்

விளக்க உரை

(2734)

இன்னிசை ஓசைக் கிரங்காதார், மால்விடையின் மன்னும் மணிபுலம்ப வாடாதார், - பெண்ணைமேல்

விளக்க உரை

(2735)

பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார், - உம்பவர்வாய்த்

விளக்க உரை

(2736)

துன்னும் மதியுகுத்த தூநிலா நீணெருப்பில், தம்முடலம் வேவத் தளராதார், - காமவேள்

விளக்க உரை

(2737)

மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்தெய்ய, பொன்னொடு வீதி புகாதார் தம் பூவணைமேல்

விளக்க உரை

(2738)

சின்ன மலர்க்குழலும் அல்குலும் மென்முலையும், இன்னிள வாடை தடவத்தாம் கண்டுயிலும்,

பொன்னனையார் பின்னும் திருவுறுக போர்வேந்தன்

விளக்க உரை

(2739)

தன்னுடைய தாதை பணியால் அரசொழிந்து ,

பொன்னகரம் பின்னே புலம்ப வலங்கொண்டு, மன்னும் வளநாடு கைவிட்டு , - மாதிரங்கள்

விளக்க உரை

(2740)

மின்னுருவில் விண்டோர் திரிந்து வெளிப்பட்டு கன்நிறைந்து தீய்ந்து கழையுடைத்து கால்சுழன்று,

பின்னும் திரைவயிற்றுப் பேயே திரிந்துலவா, கொன்னவிலும் வெங்கானத் தூடு,-கொடுங்கதிரோன்

விளக்க உரை

Last Updated (Wednesday, 12 January 2011 07:04)

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain