இரண்டாந் திருமொழி

(2721)

முன்னம்நான் சொன்ன அறத்தின் வழிமுயன்ற, அன்னவர்த்தாம் காண்டீர்க்க ளாயிரக்கண் வானவர்கோன்,

பொன்னகரம் புக்கமரர் போற்றிசைப்ப, - பொங்கொளிசேர்

விளக்க உரை

(2722)

கொல்னவிலும் கோளரிமாத் தாஞ்சுமந்த கோலம்சேர்,

மன்னிய சிங்கா சனத்தின்மேல், - வாணொடுங்கண்

விளக்க உரை

(2723)

கன்னியரா லிட்ட கவரிப் பொதியவிழ்ந்து ,ஆங் கின்னளம்பூந் தென்றல் இயங்க, - மருங்கிருந்த

விளக்க உரை

(2724)

மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல், முன்னம் முகிழ்த்த முகிழ்நிலா வந்தரும்ப,

அன்னவர்த்தம் மானோக்க முண்டாங் கணிமலர்சேர், பொன்னியல் கற்பகத்தின் காடுடுத்த மாடெல்லாம்,

மன்னிய மந்தாரம் பூத்த மதுத்திவலை, இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர்,

மன்னிய மாமயில்போல் கூந்தல், - மழைத்தடங்கண்

விளக்க உரை

(2725)

மின்னி டையா ரோடும் விளையாடி-வேண்டிடத்து,

மன்னும் மணித்தலத்து மாணிக்க மஞ்சரியின், மின்னின் ஒளிசேர் பளிங்கு விளிம்படுத்த,

மன்னும் பவளக்கால் செம்பொஞ்செய் மண்டபத்துள், அன்ன நடைய அரம்பய ர்த்தம் வகைவளர்த்த

இன்னிசையாழ் பாடல்கேட் டின்புற்று, - இருவிசும்பில்

விளக்க உரை

(2726)

மன்னும் மழைதழும் வாணிலா நீண்மதிதோய்,

மின்னி னொளிசேர் விசும்பூரும் மாளிகைமேல், மன்னும் மளிவிளக்கை மாட்டி, - மழைக்கண்ணார்

விளக்க உரை

(2727)

பன்னு விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல், துன்னிய சாலேகம் சூழ்கதவம் தாள்திறப்ப,

அன்னம் உழக்க நெறிந்துக்க வாள்நீலச், சின்ன நறுந்தாது சூடி, - ஓர் மந்தாரம்

விளக்க உரை

(2728)

துன்னும் நறுமலரால் தோள்கொட்டி, கற்பகத்தின் மன்னும் மலர்வாய் மணிவண்டு பின்தொடர

இன்னிளம்பூந் தென்றல் புகுந்து,ஈங்க் கிளைமுலைமேல் நன்னருஞ் சந்தனச் சேறுலர்த்த, - தாங்கருஞ்சீர்          

விளக்க உரை

(2729)

மின்னி டைமேல் கைவைத் திருந்தேந் திளைமுலைமேல், பொன்னரும் பாரம் புலம்ப, - அகங்குழைந்தாங்      

விளக்க உரை

(2730)

இன்ன வுருவின் இமையாத் தடங்கண்ணார், அன்னவர்த்தம் மானோக்கம் உண்டாங் கணிமுறுவல்,

இன்னமுதம் மாந்தி யிருப்பர், - இதுவன்றே

விளக்க உரை

Last Updated (Wednesday, 12 January 2011 06:59)

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain