nalaeram_logo.jpg
(866)

அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்

ஒத்தொவ்வாத பல்பிறப்பொ ழித்துநம்மை யாட்கொள்வான்

முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்

எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே.

பதவுரை

முத்தனார்

-

ஸம்ஸார ஸம்பந்தமில்லாதவரும்

முகுந்தனார்

-

மோக்ஷபூமியை அளிப்பவருமான பெருயாமன்;

ஒத்து ஒவ்வாத  பல் பிறப்பு ஒழித்து

-

ஞானமுடைமையால் ஒத்தும் யோநிபேதத்தால் ஒவ்வாமலுமிருக்கிற பலவகைப்பட்ட பிறவிகளைப்போக்கி

நம்மை ஆட்கொள்வாள்

-

நம்மை அடிமை கொள்வதற்காக

அத்தன் ஆகி

-

பிதாவாயும்

அன்னை ஆகி

-

மாதாவயும்

ஆளும் எம்பிரானும் ஆய்

-

அடிமைகொள்ளும் ஸ்வாமியாயும்

நம்முன்

-

நம்மிடத்திலே

புகுந்து மேவினார்

-

புகுந்து ஒரு நீராகப் பொருந்தினார்; (ஆனபின்பு)

ஏழை நெஞ்சமே

-

மதிகெட்ட மனமே

எத்தினால்

-

எதுக்காக

இடர் கடல்

-

துக்கஸாகரத்திலே

கிடத்தி

-

அழுந்திக் கிடக்கிறாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அன்று திருத்தேர்த்தட்டிலே நின்று கண்ணபிரான் அர்ஜுனனை னோக்கி ‘மாசுச:- துக்கப்படாதே” என்று சரமச்லோக மருளிச் செய்தாப்போல, இவ்வாழ்வார் தமது திருவுள்ளத்தைநோக்கி “மாசுச.” என்கிறார். இப்பாட்டில். முமுக்ஷுப்படியின் முடிவிலே “வார்த்தையறிபவர் என்கிற பாட்டும்! * அத்தனாகி என்கிற பாட்டும் இதுக்கு அர்த்தமாக அநுஸந்தேயம்.” என்று பிள்ளையுலகாசிரியர் அருளிச்செய்தமை நோக்கத்தக்கது.

“முத்தனார் முகுந்தனார் - ஒத்தொவ்வாத பல்பிறப்பொழித்து நம்மை யாட்கொள்வான். அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்ப் புகுந்து நம்முன் மேவினார். ஏழை நெஞ்சமே! எத்தினால் இடர்க்கடல் கிடத்தி?” என்று அசுவயிப்பது, அகிலஹேய ப்ரத்யநீகராகையாலே ஸம்ஸார நாற்றமே கண்டறியாதவராய் மோக்ஷபூமியைத் தந்தருள்பவரான பெருமான் பல வகைப்பட்ட பிறவிகளைப் போக்கி நித்ய ஸம்ஸாரிகளான நம்மை நித்யஸூரிகளைப்போல அடிமைக்கொள்ளத் திருவுள்ளம்பற்றி, பிதாவாயும் மாதாவயும் நம்முடைய கைங்கர்ய ப்ரதிஸம் பக்தியான ஸ்வாமியாயும் இப்படி ஸர்வவித பந்துவாயும் நம்முடைய சிறுமையையும் தம்முடைய பெருமையையும் பாராதே நம்முடைய ஸகலமான பாரங்களையும் தாமே ஏறிட்டுக் கொண்டு செய்துமுடிப்பதாக நம்முன்னே புகுந்து ஒருநீராகப் பொருந்தினார். அறிவுகெட்ட நெஞ்சே! ஸ்வஜ்ஞனாயும் ஸ்ர்வசந்தநனாயும் ப்ராப்தனாயும் தன்மேன்மை பாராதே தாழநின்று உபகரிக்குமவனாயும் அவன் நமக்கு வாய்திருக்க, ஏத்தாலே  நீ துக்கக்கடலில் கிடக்கிறது? இனி துக்கப்படாதே கொள் என்கிறார்.

“ஒத்தொவ்வாத பல்பிறப்பு” என்பதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறுவர்; எல்லாப் பிறவிகளும் ஹேயமாயிருக்கச் செய்தேயும் ஒருவனுக்கு ப்ரியமானது ஜன்மம் மற்றொருவனுக்கு அப்ரியமாகிறது; ஒருவனுக்கு அப்ரியமான ஜன்மம் வேறொருவனுக்கு ப்ரியமாகிறது. ஓராத்மாவுக்கு மநுஷ்யஜ்ம்மன் ப்ரியமாயிருந்தால், இன்னுமோராத்மாவுக்கு வராஹஜன்மம் ப்ரியமாகிறது. இப்படி ஆத்மபேதேந மனஸ்ஸுக்கு ஒத்தும் ஓவ்வாமலுமிருக்கிற பல்வகைப் பிறப்புக்களென்றவாரும். முத்தனார் = முக்த.” என்ற வடசொல்லுக்கு “விடுபட்டவன்” என்று பொருள்; அதாவது ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டவன் என்கை; ஸம்ஸாரியாயிருந்த ஜீவாத்மா ஒரு காலத்தில் வீடுபெற்றால் அவன் முத்தனெனப்படுவான்; அதுபோல எம் பெருமானை முத்தனார் என்னலாமோ எனின்; ஸம்ஸார ஸம்பந்தம் இருந்து கழிந்தவர் என்று இவ்விடத்தில் பொருள் கொள்ளுயாது ஸம்ஸாரப்ரதியார் என்று மாத்திரமே பொருள்கொள்ள வேணும். வேத புருஷன் எம்பெருமானை “*** என்று சொன்னவிடத்திற்குச் சொல்லிக்கொள்ள வேண்டிய  உபபத்திகள் இங்கே அநுஸந்தேயம்; விரிப்பிற்பெருகும் முகுந்தனார் = மு. முக்தியாகிய கு.- பூமியை உ- கொடுப்பவர்.

English Translation

Like father and like mother too, the Lord who lives in all our hearts, -- He cuts the cords of countless births and takes us into his reserve. He is free, he makes us free, he enters us and fills our soul, the One by which, O lowly heart, we cross the ocean-misery.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain