(851)

பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண்நின்றும் நீங்குமஃது

இறப்பவைத்த ஞானநீச ரைக்கரைக்கொ டேற்றுமா

பெறற்கரிய நின்னபாத பத்தியான பாசனம்

பெறற்கரிய மாயனே எனக்குநல்க வேண்டுமே.

 

பதவுரை

பெறற்கு அரிய மாயனே

-

(ஒருவர்க்கும் ஸ்வயத்தக்கதாலே பெறுவதற்கு முடியாத எம்பெருமானே!

பிறப்பினோடு பேர் இடர் கழிக்கன் நின்றும்

-

பிறப்பு முதலிய பெருப்பெருத்த துக்கங்களை நினைக்கின்ற ஸம்ஸாரத்தில் நின்றும்

நீங்கும் அஃது

-

நீங்குவதற் குறும்பான தத்வ ஹிதரங்கள்

இறப்ப வைத்த

-

மறந்தொழிந்த

ஞான நீசரை

-

ஸர்வஜ்ஞராகத் தங்களை நினைத்துக்கொண்டிருக்கிற நீசர்களை

கரை கொடு

-

ஏற்றம் ஆ

கரையிலே கொண்டு சேர்க்கும்படியாக

பெறற்கு அரிய

-

துர்லபமான

சின்ன பாதம் பத்தி ஆன

-

உன் திருவடிகளில் பக்தியாகிற

பாசனம்

-

மரக்கல (ஓட) த்தை

எனக்கு நல்க வேண்டும்

-

அடியேனுக்கு அருளவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘என்னை நின்னுள் நீக்கல்’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘அழ்வீர்! அவிச்சிந்நமான திவ்ய ஸம்ச்லெஷத்தைப் பிரார்த்திக்கின்றீரே; அது பெறவேணுமானால் நீர் பரமபக்தியோடு கூடியிருக்க வேணுமே’ என்ன; அப்படிப்பட்ட பரமபக்தியையும் நீயே தந்தருளவேணுமென்று இரக்கிறார். தேவரீருடைய பாதாரவிந்தத்திலே பக்தியுண்டாவது ஸாமாந்யமல்ல; அஃது அனைவர்க்கும் எளிதில் பெறுதற்கு அரிது; அதனை அடியேனுக்கு நிர்ஹேதுகக்குபையினால் தந்தருளவேணுமென்று பின்னடிகளில் பிரார்த்திக்கிறார். அப்படிப்படட் பக்தி அடியேனுக்கு தேவரீர் அருளினால் அஃது என்னொருவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மாத்திரம் உபயுக்தமாகாது; அதனைக்கொண்டு பலநீசர்களை நான் கரையேற்றப் பார்ப்பேனென்கிறார் முன்னடிகளில்.

 

English Translation

Standing in the vortex of a painful life of birth and death, the feeble minded suffering souls can find a way to reach the shore, by holding on to Holy Feet with cords of faith unshakeable. O Lord in high and hard to get, you must begin to help me now.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain