ஒன்பதாந் திருமொழி

(2665)

பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை

இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்

தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,

செழும்பரவை மேயார் தெரிந்து.

விளக்க உரை

(2666)

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,

வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்

அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை

அம்மானை யேத்தா தயர்ந்து.

விளக்க உரை

(2667)

அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய், - செயற்பால

அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்

மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

விளக்க உரை

(2668)

வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.

விளக்க உரை

(2669)

தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,

எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்

தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய

கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்.

விளக்க உரை

(2670)

கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,

பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த

சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,

என்நினைந்து போக்குவரிப் போது.

விளக்க உரை

(2671)

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்

எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்

கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்

மெய்கழலே ஏத்த முயல்.

விளக்க உரை

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain